பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

கொவிட்-19-க்கு எதிரான ஒன்றுபட்ட போருக்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறைகூவல்

प्रविष्टि तिथि: 17 MAY 2021 4:38PM by PIB Chennai

நூறாண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் பேரிடர் இதுவென்றும் அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதகுலத்தின் நலன் கருதி அனைவரும் ஒன்றுபட்டு கொவிட்-19-க்கு எதிராக போரிட வேண்டும் என்றும் வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான திரு ஜிதேந்திர சிங் இன்று கூறினார்.

ஊடகங்களின் பிரத்தியேக நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், எதிர்க்கட்சித் தலைவர்களும் அறிவுஜீவிகள் என்று கூறப்படுபவர்களும் தங்களது பெரும்பாலான நேரம் மற்றும் சக்தியை திரு மோடி அரசை விமர்சிப்பதற்கான அறிக்கைகள் மற்றும் டிவிட்டர் பதிவுகளில் செலவிடுவது ஏமாற்றம் அளிக்கிறது என்றார். இதே அளவிலான நேரம் மற்றும் சக்தியை அரசுடன் இணைந்து பெருந்தொற்று சவாலை எதிர்கொள்ள அவர்கள் செலவிட்டு இருப்பார்களேயானால் கொவிட்-19-க்கு எதிரான இந்தியாவின் போர் மிகவும் எளிதான ஒன்றாக ஆகி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களும், ஊடகங்களும் சமீபகாலமாக போட்டி போட்டு கொண்டு  ஈடுபட்டு வருவதாக தெரிவித்த டாக்டர் ஜிதேந்திர சிங், அவர்கள் அனைவரும் உண்மையிலேயே ஏதேனும் இடைவெளிகள் தென்பட்டால் அதை நிரப்ப முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

கொவிட் இரண்டாம் அலையை கணிக்க இந்திய அரசு தவறிவிட்டது என்று தினந்தோறும் உலகத்திற்கு கூறிவரும் விமர்சகர்கள் மீது அமைச்சர் வருத்தம் தெரிவித்தார்.

அனைவருக்கும் இது சோதனையான காலக்கட்டம் என்று குறிப்பிட்ட டாக்டர் ஜிதேந்திர சிங், அரசியல் காரணங்களுக்காக பொய்யாக குற்றம் சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல என்றார். மேற்கண்டவற்றை தவிர்த்து, மக்களிடையே நம்பிக்கையை ஊட்டி, 135 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் கொவிட்டுக்கு எதிராக எவ்வாறு போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறித்து விளக்க வேண்டும் என்றும் அவர்களை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மக்கள் முன் செல்வதற்கு முன்னர் உண்மைகளை சரி பார்த்துக் கொள்ளுமாறும், அவர்களுடைய கருத்துகளால் சமுதாயத்தில் பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அனைவரையும் டாக்டர் ஜிதேந்திர சிங் கேட்டுக்கொண்டார்.

*****************


(रिलीज़ आईडी: 1719431) आगंतुक पटल : 254
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Telugu