சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட சர்வதேச கொவிட் நிவாரணப் பொருட்களின் விவரம்

Posted On: 17 MAY 2021 4:11PM by PIB Chennai

கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், முன்னணியில் இருக்கும் மத்திய அரசுசர்வதேச நாடுகள் / அமைப்புகள் நன்கொடையாக அளிக்கும் மருத்துவ சாதனங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் பெற்று வருகிறது.

மொத்தம் 11321 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், 15,801 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், 19 ஆக்ஸிஜன் உற்பத்தி கருவிகள், 7,470   வென்டிலேட்டர்கள், சுமார் 5.5 லட்சம் ரெம்டெசிவிர் குப்பிகள் ஆகியவை கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் மே 16ம் தேதி வரை  பெறப்பட்டு, அவைகள் சாலை மார்க்கமாகவும், வான் வழியாகவும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா, ருமேனியா, அமெரிக்கா, கஜகஸ்தான், இங்கிலாந்து, ஐரோப்பிய யூனியன் (ஜெர்மனி, போர்ச்சுக்கல், ஸ்லோவேனியா), கத்தார், குவைத், ஐசிபிஎப்(கத்தார்), பிரிட்டிஷ் ஆக்ஸிஜன் கம்பெனி (இங்கிலாந்து) ஆகியவற்றிடமிருந்து கடந்த 15/16ம் தேதிகளில் பெறப்பட்ட முக்கியப் பொருட்கள்.

* ஆக்ஸிஜன் செறிவூட்டிகள்: 26

* வென்டிலேட்டர்கள்: 105

* ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்: 2,332

* ரெம்டெசிவிர் குப்பிகள்: 30,753

* கேசிரிவிமாப்/இம்டெவிமாப் - 20,000

இவற்றை மாநிலங்கள் /யூனி்யன் பிரதேசங்களுக்கு திறம்பட ஒதுக்கீடு செய்து, விநியோகிப்பது தொடர்ச்சியாக நடைபெறுகிறது.  இதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விரிவாக கண்காணித்து வருகிறது. இவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக  ஒரு பிரத்தியேக பிரிவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது.

*****************


(Release ID: 1719418)