ரெயில்வே அமைச்சகம்

23 நாட்களில் சுமார் 10300 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை நாடு முழுவதும் விநியோகித்துள்ளது இந்திய ரயில்வேயின் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்

Posted On: 17 MAY 2021 4:06PM by PIB Chennai

பல்வேறு இடர்பாடுகளையும் கடந்து திரவ மருத்துவ பிராணவாயுவை தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு சேர்த்து வரும் இந்திய ரயில்வேயின் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள், இதுவரை 600 டேங்கர்களில் சுமார் 10,300 மெட்ரிக் டன் பிராணவாயுவை விநியோகித்துள்ளது.

கடந்த சில நாட்களாக நாள்தோறும் ஏறத்தாழ 800 மெட்ரிக் டன் திரவ மருத்துவ பிராணவாயுவை நாடுமுழுவதும் ஆக்சிசன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கொண்டு சேர்த்துள்ளன.

தற்போது ஏற்பட்டுள்ள புயலின் போதும், குஜராத்தில் இருந்து  அதிகாலையில் 2 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி 150 மெட்ரிக் டன் பிராணவாயுவை ரயில்வே விநியோகித்துள்ளது.

அதிகாலை 4 மணிக்கு வதோதராவில் இருந்து இரண்டு டிரக்குகள் மற்றும் 45 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் தில்லிக்கு ஒரு ரயில் புறப்பட்டது.

மற்றொரு ரயில், ஹப்பாவிலிருந்து காலை 5:30 மணிக்கு 106 மெட்ரிக் டன் பிராணவாயு அடங்கிய 6 டேங்கர்களுடன் உத்தரப்பிரதேசம் மற்றும் தில்லிக்கு  புறப்பட்டது.

பொகாரோவிலிருந்து பஞ்சாபிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள முதலாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்,  2 டேங்கர்களில் 41.07 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் இன்று மாலை 7 மணி அளவில் ஃபில்லாவூர் சென்றடையும்.

ஏப்ரல் 24-ஆம் தேதி 126 மெட்ரிக் டன் பிராணவாயுவுடன் மகாராஷ்டிராவிலிருந்து தனது முதல் பயணத்தைத் துவக்கிய ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், சுமார் 23 நாட்களில் 13 மாநிலங்களுக்கு 10,300க்கும் அதிகமான மெட்ரிக் டன் மருத்துவ பிராணவாயுவை வழங்கியுள்ளது.

இதுவரை தமிழகத்திற்கு 231 மெட்ரிக் டன்னும், மகாராஷ்டிராவிற்கு 521 மெட்ரிக் டன்னும், உத்தரப் பிரதேசத்திற்கு 2652 மெட்ரிக் டன்னும், மத்தியப் பிரதேசத்திற்கு 431 மெட்ரிக் டன்னும், ஹரியானாவிற்கு 1290 மெட்ரிக் டன்னும்தெலங்கானாவிற்கு 564 மெட்ரிக் டன்னும், ராஜஸ்தானிற்கு 40 மெட்ரிக் டன்னும், கர்நாடகாவிற்கு 361 மெட்ரிக் டன்னும், உத்தராகண்டிற்கு 200 மெட்ரிக் டன்னும், பஞ்சாப்பிற்கு 40 மெட்ரிக் டன்னும், கேரளாவிற்கு 118 மெட்ரிக் டன்னும், தில்லிக்கு 3734 மெட்ரிக் டன்னுக்கும் மேற்பட்ட திரவ மருத்துவ பிராணவாயுவும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719327

*****************



(Release ID: 1719385) Visitor Counter : 178