புவி அறிவியல் அமைச்சகம்

அதி தீவிரப் புயலான டவ்-தே, கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் மிக அதி தீவிரப் புயலாக மாறி நிலை கொண்டுள்ளது: குஜராத் & டையு கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

प्रविष्टि तिथि: 17 MAY 2021 9:19AM by PIB Chennai

இந்திய வானியல் துறையின் தேசிய காலநிலை முன்னெச்சரிக்கை மையத்தின் அறிக்கையின்படி (நேரம்: காலை 8.15 மணி, 17-05-2021) டவ்-தே புயலானது கிழக்கு மத்திய அரபிக் கடலில் மிக அதி தீவிரப் புயலாக மாறி நிலை கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் சுமார் 20 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு- வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிர சூறாவளிப் புயலாக மாறியுள்ளது.

இந்த புயல் மேலும் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று மாலை குஜராத் கடற்கரையைச் சென்றடையும். பின்னர் குஜராத்திற்கும் போர்பந்தருக்கும் இடையேயான மஹுவா பகுதியில் (பாவ்நகர் மாவட்டம்) இரவு (8 - 8.30PM) மணி அளவில் கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 155 முதல் 165 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசத் தொடங்கி அதிகபட்சமாக 185 கிலோ மீட்டர் வேகம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

இதனால் குஜராத் மற்றும் டையு கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719236

***************

 (Release ID: 1719236)


(रिलीज़ आईडी: 1719289) आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati