சுரங்கங்கள் அமைச்சகம்
கொவிட் 2 ஆம் அலைக்கு எதிரான போராட்டத்தில், சுரங்க அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனங்கள் உதவி
Posted On:
16 MAY 2021 5:44PM by PIB Chennai
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசின் அனைத்து துறைகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளன. சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும், பொதுத் துறை நிறுவனங்கள், கொவிட் சிகிச்சைக்கான வசதிகளுக்கு நிதியுதவி அளிப்பதோடு, தங்கள் சொந்த மருத்துவமனைகளையும் மேம்படுத்தி வருகின்றன மற்றும் தடுப்பூசி முகாம்கள் நடத்தி வருகின்றன.
ஒடிசா கோராபுட் பகுதியில் உள்ள ஷகீத் நாயக் மருத்துவமனையின் பிரத்தியேக கொவிட் சிகிச்சை மையத்துக்கு, தேசிய அலுமினிய நிறுவனம்(நால்கோ) ரூ.1.16 கோடி நிதி அளித்துள்ளது. ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் பனார்பல் பகுதியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையின் கொவிட் சிகிச்சை மையத்துக்கு அதன் ஒரு மாத செலவுத் தொகையான ரூ. 30 லட்சத்தை வழங்கியுள்ளது.
இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் (எச்சிஎல்) மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கொவிட் சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்றன. மத்தியப் பிரதேசத்தில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தின் மலன்ஜ்கந்த் தாமிர ஆலை, கென்டதோலா பகுதியில் உள்ள கொவிட் சிகிச்சை மையத்துக்கு 10 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது.
கொவிட்-19 முதல் அலையின் போதும், உதவிகள் வழங்கியதில், சுரங்க அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனங்கள் முன்னணியில் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1719129
*****************
(Release ID: 1719188)
Visitor Counter : 170