பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

கொச்சி எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தில் தற்காலிக கொவிட் மையம்

Posted On: 14 MAY 2021 5:03PM by PIB Chennai

கேரளாவில் அம்பாலமுகல் என்ற இடத்தில், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனத்தின் கொச்சி சுத்திகரிப்பு மையம் நடத்தும் பள்ளி உள்ளது. இங்கு 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக கொவிட் சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட்டது.  பெட்ரோலியம் மற்றும் இயற்கைவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள மகாரத்னா  அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் நிறுவனம்(பிபிசிஎல்), இந்த தற்காலிக மையத்துக்கு தேவையான  ஆக்ஸிஜன், மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை இலவசமாக வழங்கும். இங்கு பிரத்தியேக ஸ்டெயின்லஸ் ஸ்டீல் பைப் மூலம் ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படும். இந்த தற்காலிக மையத்தில் முதல் கட்டமாக 100 படுக்கைகள் இருக்கும். பின்பு இந்த வளாகத்தில்  1,500 படுக்கைகளாக விரிவுபடுத்தப்படும். சுகாதார கட்டமைக்கு உதவுவதில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் முன்னணியில் உள்ளது. மும்பை, மற்றும் பினா சுத்திகரிப்பு நிலையங்களில் வசதிகள் மேம்படுத்தப்பட்டு அரசு மருத்துவ மனைகளுக்கு மாதம் 600 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. கொச்சி சுத்திகரிப்பு ஆலையிலிருந்து மாதந்தோறும் 100 மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜன் விநியோகிக்கப்படுகிறது.

இந்த கொவிட் மைய திறப்பு நிகழ்ச்சியில் பேசிய பிபிசிஎல் கொச்சி சுத்திகரிப்பு ஆலையின் நிர்வாக இயக்குனர் திரு சஞ்சய் கண்ணா, ‘‘நெருக்கடியான நேரத்தில், சமூகத்துக்கு சேவை செய்வதில் பாரத் பெட்ரோலியம் எப்போது முன்னணியில் உள்ளது. நாட்டின் வாழ்வை ஊக்குவிப்பதுதான் எங்களின் முக்கிய நோக்கம்.  எங்கள் வளாகத்தில் இந்த கொவிட் சிகிச்சை மையத்தை அமைத்து வசதிகள் செய்து கொடுத்தது, எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதி. குறுகிய காலத்தில் எங்களின் ஆக்ஸிஜன் உற்பத்தி வசதியை மேம்படுத்தியது சவாலான பணியாக இருந்தது. ஆனால் அனைத்து பணிகளையும், 5 நாட்களுக்குள் எங்களால் முடிக்க முடிந்தது’’ என்றார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718630

*****************


(Release ID: 1718657) Visitor Counter : 261