புவி அறிவியல் அமைச்சகம்
அடுத்த 24 மணி நேரத்தில் அனல் காற்று வீச வாய்ப்பில்லை
प्रविष्टि तिथि:
14 MAY 2021 9:31AM by PIB Chennai
அடுத்த 24 மணி நேரத்தில் அனல் காற்று வீச வாய்ப்பில்லை, என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.
தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:
நாட்டின் எந்த பகுதியிலும் நேற்று அனல் காற்று வீசவில்லை. நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக 40.0 டிகிரி செல்சியஸ்க்கு மேல் விதர்பா, தெலங்கானா, மேற்கு மத்தியப் பிரதேசத்தின் சில இடங்கள், ராஜஸ்தான், குஜராத், கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் மத்திய மகாராஷ்டிராவில் பதிவானது.
அந்தமான் நிக்கோபார் தீவுகள், சவுராஷ்டிரா, கட்ச், கொங்கன் மற்றும் கோவா, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை நேற்று இயல்பை விட 1.6 டிகிரி செல்சியஸ் முதல் 3.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருந்தது.
நேற்று அதிகபட்ச வெப்பநிலையாக விதர்பா பகுதியின் சந்திரபூரில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.
அடுத்த 24 மணி நேரத்தில், எங்கும் அனல் காற்று வீசுவதற்கு வாய்ப்பில்லை.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1718482
*****************
(रिलीज़ आईडी: 1718646)
आगंतुक पटल : 163