சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத் துறை நிறுவனங்களின் கொவிட் நிவாரண நடவடிக்கைகள்

Posted On: 11 MAY 2021 2:46PM by PIB Chennai

கொவிட்-19 இரண்டாம் அலை சமயத்தில்சமூகநீதி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களான தேசிய பட்டியலினத்தவர் நிதி மற்றம் மேம்பாட்டு கழகம்  (NSFDC) மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்ட பிரிவினர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகம் ( NBCFDC) ஆகியவை இணைந்து கொவிட்-19 நோயாளிகள் மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கீழ்கண்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

உணவு வழக்கும்  திட்டம்:

தில்லி, மும்பை, பெங்களூரில் ஊரடங்கு சமயத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், தின ஊதியத்  தொழிலாளர்கள், மூத்த குடிமக்கள், கைவிடப்பட்டவர்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த உணவு வழங்கும் திட்டம், தேவைப்படுவோருக்கு 15 நாட்களுக்கு 39,000 உணவு பொட்டலங்களை வழங்கும். மும்பையில் இத்திட்டம் கடந்த 8ம் தேதி தொடங்கியது. பெங்களூரு மற்றும் தில்லியில் இத்திட்டம் மே 11ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளதுஇந்த உணவு வழங்கும் திட்டத்தை, உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் என்எஸ்எப்டிசி மற்றும் என்பிசிஎப்டிசி ஆகியவற்றின் பங்களிப்புடன் அமல்படுத்தும்.

கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ சாதனங்கள் வழங்குதல்:

39 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள், ஒரு ஆக்ஸிஜன் செறிவூட்டி மற்றும் பிபாப் இயந்திரம் ஆகியவை  தில்லியில் உள்ள அரசு மருத்துவமனைகளான ஆச்சார்ய ஸ்ரீ பிக்சு மருத்துவமனை மற்றும் சுவாமி தயானந் மருத்துவமனை மற்றும் ஒரு தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.

                                                               ------



(Release ID: 1717696) Visitor Counter : 179