பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தனது மக்களவை தொகுதிக்கு கொவிட் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார் மத்திய அமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங்
प्रविष्टि तिथि:
09 MAY 2021 6:09PM by PIB Chennai
வடகிழக்கு பகுதி மேம்பாட்டுக்கான மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தனது மக்களவை தொகுதியான உதம்பூர்-கதுவா-தோடா ஆகியவற்றுக்கு கொவிட் தொடர்பான பொருட்களின் முதல் தொகுப்பை இன்று அனுப்பி வைத்தார்.
முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், சோப்புகள், நோய் எதிர்ப்பு சக்தி பொருட்கள் ஆகியவை அடங்கிய வாகனத்தை அவர் இன்று கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
3 வாரங்களாக கொவிட் அறிகுறிகள் இருந்ததால், தம்மை தனிமைப்படுத்திக் கொண்டிருந்த அவர் இன்று கொவிட் பாதிப்பு இல்லை என உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முதல் பணியாக, தனது தொகுதிக்கு கொவிட் நிவாரணப் பொருட்களை அனுப்ப முடிவு செய்ததாக டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்தார்.
கடந்த மாதமே இந்த பொருட்களை அனுப்ப அவர் ஏற்பாடு செய்திருந்தாகவும், கொவிட் பாதிப்பு காரணமாக இந்த பொருட்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவன உறுப்பினர்கள் வேறுபாடுகளை மறந்து கொவிட்டுக்கு எதிராக போராட பிரதமர் மேடி தலைமையில் ஒன்றிணைய வேண்டும் என டாக்டர் ஜித்தேந்திர சிங் அழைப்பு விடுத்தார். இது நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் பாதிப்பு என கூறிய அவர், இதர பிரச்னைகள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்றும், அப்போதுதான் எதிர்காலத்துக்கு மனிதகுலம் இருக்கும் என்றார்.
*****************
(रिलीज़ आईडी: 1717293)
आगंतुक पटल : 197