எரிசக்தி அமைச்சகம்

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, தேசிய நீர்மின் கழகத்தின் சிறப்பு முகாமில் 300 ஊழியர்களுக்கு கொவிட் தடுப்பூசி

Posted On: 09 MAY 2021 8:53AM by PIB Chennai

மத்திய மின் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களான இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் தேசிய நீர்மின் கழகம் ஆகியவை, புதுதில்லியில், மே 7 மற்றும் 8 தேதிகளில் 18-44 வயது வரையிலான ஊழியர்களுக்கு இலவச கொவிட் தடுப்பூசி முகாமை நடத்தின.

மத்திய மின்சக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் இணை அமைச்சரும், (தனி பிரிவு) திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவின் இணை அமைச்சருமான திரு ஆர் கே சிங்கின் உத்தரவின் பேரில் இந்த முகாம் நடத்தப்பட்டது.

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை, தேசிய நீர்மின் கழகம்மின் சக்தி அமைச்சகம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், மத்திய அரசின் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் மொத்தம் 317 ஊழியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொவிட்-19 தொற்றின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை தொடர்ந்து பல முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட உழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனிற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறப்புக் குழுவை அந்த நிறுவனம் அமைத்துள்ளது.

24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் விநியோகிக்கப்படுவதற்காக, எரிசக்தித் துறையில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முகாம் நடத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1717146

*****************



(Release ID: 1717239) Visitor Counter : 227