ரெயில்வே அமைச்சகம்

மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ஹரியானா, தில்லி, ராஜஸ்தான், தெலங்கானா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் சுமார் 3400 மெட்ரிக் டன் பிராண வாயுவை ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் கொண்டு சேர்த்துள்ளன

Posted On: 08 MAY 2021 5:07PM by PIB Chennai

அனைத்து சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை இந்திய ரயில்வே தொடர்ந்து கொண்டு சேர்த்து வருகிறது.

இது வரை சுமார் 3400 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜனை 220 டேங்கர்களில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது.

54 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் தங்களது பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், தேவையுள்ள மாநிலங்களுக்கு திரவ மருத்துவ ஆக்சிஜனை மிகவும் குறைந்த கால அவகாசத்தில் கொண்டு சேர்ப்பதை இந்திய ரயில்வே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த செய்திக் குறிப்பு தயாராகிக் கொண்டிருக்கும் நேரம் வரை, கீழ்காணும் அளவில் மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே கொண்டு சேர்த்துள்ளது- மகாராஷ்டிரா (230 மெட்ரிக் டன்), உத்தரப் பிரதேசம் (968 மெட்ரிக் டன்), மத்தியப் பிரதேசம் (249 மெட்ரிக் டன்), தில்லி (1427 மெட்ரிக் டன்), ஹரியானா (355 மெட்ரிக் டன்), ராஜஸ்தான் 40 (மெட்ரிக் டன்) மற்றும் தெலங்கானா (123 மெட்ரிக் டன்).

தற்சமயம் 26 டேங்கர்களில் எடுத்து செல்லப்பட்டு கொண்டிருக்கும் 417 டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் தில்லியை விரைவில் சென்றடையும். மிகவும் துடிப்பான முறையில் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டு, தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றப்படுகின்றன. இன்று இரவு இன்னும் அதிக அளவில் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்கள் தங்களது பயணங்களை தொடங்கவிருக்கின்றன.

-----(Release ID: 1717095) Visitor Counter : 19