ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

ஏப்ரல் 21 முதல் மே 16 வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரெம்டெசிவர் மருந்தின் நிறுவன வாரியான தரவுகள் வெளியீடு

Posted On: 08 MAY 2021 10:01AM by PIB Chennai

ஏப்ரல் 21 முதல் மே 16 வரை நிறுவனங்கள் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள ரெம்டெசிவர் மருந்தின் தரவுகள் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. சந்தை நிறுவனங்களுடன் ஆலோசிக்கப்பட்டு இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உரிய நேரத்தில் ரெம்டெசிவர் மருந்து வழங்கப்பட வேண்டுமென்று நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ரெம்டெசிவர் குப்பிகளை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கீடு செய்து நேற்று அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு ஜைட்ஸ் காடில்லா  நிறுவனத்திடமிருந்து 36,000 குப்பிகள், ஹெட்ரோ நிறுவனத்திடமிருந்து 69,400 குப்பிகள், மைலான் நிறுவனத்திடமிருந்து 72,500 குப்பிகள், சிப்லா நிறுவனத்தின் 5000 குப்பிகள், சன் நிறுவனத்தின் 10,000 குப்பிகள், ஜூபிலன்ட் நிறுவனத்தின் 3100 குப்பிகள், டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்திடமிருந்து 9,000 குப்பிகள் என மொத்தம் 205000 ரெம்டெசிவர் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரிக்கு ஹெட்ரோ நிறுவனத்தின் 4000 குப்பிகள், சன் நிறுவனத்தின் 1900 குப்பிகள் மற்றும் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்தின் 5100 குப்பிகள் உட்பட மொத்தம் 11000 ரெம்டெசிவர் குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நிறுவனங்கள் வாரியாக பிற மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள ரெம்டெசிவர் குப்பிகளின் விவரங்களை அறிந்துகொள்ள கீழ்காணும் இணைப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1716977

------



(Release ID: 1717019) Visitor Counter : 235