பாதுகாப்பு அமைச்சகம்

கொவிட்-19 இரண்டாம் அலைக்கு எதிராக பாதுகாப்பு படைகளின் செயல்பாடுகள்

Posted On: 07 MAY 2021 7:29PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாம் அலைக்கு நடுவில் தற்போது இந்தியா உள்ளது. எப்போதெல்லாம் தேசம் பிரச்சினைகளை எதிர்கொள்கிறதோ, அப்போதெல்லாம் பாதுகாப்புப் படைகள் விரைந்து வந்து  சிறப்பாக செயல்பட்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களாக பெருந்தொற்றுக்கு எதிரான நாட்டின் போரில் ஒற்றுமையுடன் பங்கேற்று பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு தேவையான ஆதரவை பாதுகாப்பு படைகள் வழங்கி வருகின்றன.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயிற்சி பெற்ற மருத்துவ அலுவலர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களை அனுப்புதல், உலகம் முழுவதிலும் இருந்து முக்கியமான பொருட்களை விமானங்கள் மூலம் கொண்டு வருதல், பயன்பாட்டில் இல்லாத ஆக்சிஜன் ஆலைகளை செப்பனிடுதல், மருத்துவ உபகரங்கணங்களை கொண்டு வருதல் என பல்வேறு விதமான உதவிகளை பாதுகாப்பு படைகள் செய்து வருகின்றன. 

புதுதில்லி, பாட்னா, அகமதாபாத், லக்னோ மற்றும் இதர இடங்களில் மருத்துவமனைகளை டிஆர்டிஓ நிறுவியுள்ளது. வாரணாசி போன்ற இடங்களில் மருத்துவமனைகள் வரவிருக்கின்றன. இவற்றில் பணியாற்றுவதற்காக 500 ராணுவ மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனுப்பப்படுகின்றனர். பல்வேறு மருத்துவமனைகளில் போர்க்கள செவிலியர் உதவியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து 24 மணிநேரமும் இவர்கள்  பணியாற்றுகின்றனர். நாட்டின் எல்லைகள் மற்றும் வான் பரப்பில் அதிகபட்ச அளவில் கண்காணிப்பை மேற்கொண்டவாறே மருத்துவ பணிகளும் தொய்வில்லாமல் நடைபெற்று வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1716892

*********************



(Release ID: 1716927) Visitor Counter : 168