பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

தேசிய நிதித் தகவல் அளித்தல் ஆணையத்தின் ஒழுங்குமுறையின் கீழ் வரும் நிறுவனங்களுக்கான தற்காலிகத் தரவுத் தளம் வெளியீடு

Posted On: 07 MAY 2021 5:23PM by PIB Chennai

பொது நலனுக்கான நிறுவனங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிறுவனங்களின் நிதி விவரங்கள் தாக்கல் மற்றும் தணிக்கைத் தரநிலைகளைக் கண்காணிப்பதற்காக நிறுவனங்கள் சட்டத்தின் 132-வது பிரிவின் கீழ் ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை அமைப்பு தேசிய நிதித் தகவல் அளித்தல் ஆணையம் ஆகும். பட்டியலில் உள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் பட்டியலில் இல்லாத பெரிய நிறுவனங்கள் இதில் அடங்கும்.

தனக்கு வழங்கப்பட்டுள்ள பணியைச் சிறப்பாகச் செய்வதற்காக  தேசிய நிதித் தகவல் அளித்தல் ஆணையத்தின் ஒழுங்குமுறைக்குள் வரும் நிறுவனங்கள் மற்றும் தணிக்கையாளர்களின் சரிபர்க்கப்பட்ட மற்றும் சரியான தரவுத் தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

அடிப்படைத் தரவு ஆதாரத்தை அடையாளப்படுத்துதல் மற்றும் சரிபார்த்தல், நிறுவன அடையாள எண் உள்ளிட்ட தரவுகளை பல்வேறு ஆதாரங்கள் மூலம் சரிபார்த்தல் போன்ற முக்கிய நடவடிக்கைகளை கொண்டு இந்தத் தரவுத் தளம் உருவாக்கப்படுகிறது. இதற்காக, பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின்  பெருநிறுவனத் தரவு மேலாண்மைப் பிரிவு மற்றும் நாட்டின் மூன்று பங்கு சந்தைகளோடு இணைந்து தேசிய நிதித் தகவல் அளித்தல் ஆணையம் பணியாற்றுகிறது.

நிறுவனங்கள் மற்றும் தணிக்கையாளர்களின் தாற்காலிகத் தகவல்கள் 2019 மார்ச் 31 அன்று தேசிய நிதித் தகவல் அளித்தல் ஆணையத்தால் தொகுக்கப்பட்டன. சுமார் 5,300 பட்டியலில் உள்ள நிறுவனங்கள் மற்றும் சுமார் 1000 பட்டியலிடப்படாத நிறுவனங்கள் என கிட்டத்தட்ட 6500 நிறுவனங்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனங்களில் தணிக்கையாளர்கள் விவரங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது.

தகவல்களை  https://www.nfra.gov.in/nfra_domain எனும் தளத்தில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1716834

*****************(Release ID: 1716908) Visitor Counter : 130