சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
தில்லியில் உள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கான ஆக்சிஜன் குறித்த சமீபத்திய தகவல்கள்
Posted On:
04 MAY 2021 7:37PM by PIB Chennai
கொவிட்-19 பாதிப்புகள் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ள காரணத்தால், பிராணவாயுக்கான தடையில்லா தேவை மற்றும் ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய/தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
புதுதில்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் தீவிர கொவிட்-19 நோயாளிகளின் சிறப்பான மருத்துவ மேலாண்மைக்கு தேவைப்படும் போதுமான மற்றும் தடையில்லா ஆக்சிஜன் விநியோகத்தை உறுதிப்படுத்துவது குறித்த உயர்மட்ட ஆய்வு கூட்டத்தை 2021 ஏப்ரல் 23 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் நடத்தினார்.
மாநகரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் டிஆர்டிஓ மூலம் ஐந்து ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ முடிவெடுக்கப்பட்டது. எய்ம்ஸ் அவசர சிகிச்சை மையம், டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனை, சஃப்தர்ஜங்க் மருத்துவமனை, லேடி ஹர்திங் மருத்துவ கல்லூரி மற்றும் எய்ம்ஸ், ஜஜ்ஜார், ஹரியானா ஆகிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் ஆலைகளை நிறுவ முடிவெடுக்கப்பட்டது.
இதற்கு பிஎம்-கேர்ஸ் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. கொவிட்-19 பாதிப்புகளின் அதிகரிப்பு மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் 500 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவ பிஎம்-கேர்ஸ் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மூன்று மாதங்களுக்குள் இவை நிறுவப்படும்.
எய்ம்ஸ் அவசர சிகிச்சை மையம் மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் ஆக்சிஜன் ஆலைகளை நிறுவுவதற்காக பிஎம் கேர்ஸ் நிதியுதவியுடன் நடைபெற்று வந்த பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வந்த நிலையில், இரு இடங்களிலும் இன்றிரவு பணிகள் நிறைவடையவுள்ளன.
இதைத் தொடர்ந்து, மேற்கண்ட மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் விநியோகம் நாளை முதல் தொடங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1715993
*****************
(Release ID: 1716027)
Visitor Counter : 275