வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
பாசுமதி அல்லாத அரிசியின் முதல் ஏற்றுமதி சரக்கு, பாரதீப் துறைமுகத்திலிருந்து வியட்நாமிற்கு அனுப்பிவைப்பு
Posted On:
03 MAY 2021 6:49PM by PIB Chennai
இந்திய அரிசி ஏற்றுமதியில், குறிப்பாக கிழக்கு பிராந்தியத்தில் அதன் சாத்தியக்கூறுகளை ஊக்குவிக்கும் வகையில் அத்தகைய சரக்கு ஒன்று ஒடிசாவின் பாரதீப் சர்வதேச சரக்கு முனையத்தில் இருந்து வியட்நாமிற்கு இன்று கொடியசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.
பாரதீப் துறைமுகத்தின் வரலாற்றில் முதன்முறையாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமான அபெடாவின் ஏற்றுமதி உறுப்பினரான சரளா உணவுகள் குழுமம் என்ற நிறுவனம், செவ்வாய்க்கிழமையன்று 20 அரிசி கொள்கலன்களையும், அதைத் தொடர்ந்து அடுத்த மூன்று மாதங்களில் 500 கொள்கலன்களையும் பாரதீப் சரக்கு முனையத்திலிருந்து வியட்நாமிற்கு அனுப்பி வைக்கும்.
பாரதீப் சர்வதேச சரக்கு முனையத்தின் வாயிலாக அரிசி ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் தென் கிழக்கு நாடுகளுக்கு பாசுமதி அல்லாத அரிசி வகைகளின் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படுவதுடன், ஒடிசா மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களைச் சேர்ந்த குறைந்தபட்சம் இரண்டு லட்சம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் என்று இந்த துவக்க விழா நிகழ்ச்சியின் போது அபெடாவின் தலைவர் டாக்டர் எம் அங்கமுத்து கூறினார்.
பாசுமதி அல்லாத அரிசி வகைகள் சென்னை, விசாகப்பட்டினம், காக்கிநாடா, முந்த்ரா, கிருஷ்ணாபட்டினம் உள்ளிட்ட இந்திய துறைமுகங்களிலிருந்து ஆப்பிரிக்க மற்றும் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த வரிசையில் விரைவில் பாரதீப் துறைமுகமும் இணையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715736
-------
(Release ID: 1715749)
Visitor Counter : 218