ரெயில்வே அமைச்சகம்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள்: இதுவரை மொத்தம் 1094 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ப் பிராணவாயுவை நாடு முழுவதும் விநியோகித்துள்ளது இந்திய ரயில்வே

Posted On: 02 MAY 2021 5:20PM by PIB Chennai

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு திரவ மருத்துவப் பிராணவாயுவை கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ரயில்வே, இதுவரை 74 டேங்கர்களில் 1094 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுவைக் கொண்டு சேர்த்துள்ளது. 19 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஏற்கனவே பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில், 4 டேங்கர்களில் சுமார் 61.46 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுவுடன் கூடுதலாக இரண்டு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றன.

கோரிக்கையை முன்வைத்துள்ள மாநிலங்களுக்குக் குறுகிய காலத்தில் இயன்ற அளவு அதிக திரவ மருத்துவப் பிராணவாயுவைக் கொண்டு சேர்ப்பதில் இந்திய ரயில்வே உறுதி பூண்டுள்ளது.

120 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுவுடன் தில்லிக்கு இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அங்கு சென்றடைந்தது. 30.86 மெட்ரிக்  திரவ மருத்துவப் பிராணவாயுவுடன் மூன்றாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில், அங்குலிலிருந்து தில்லிக்கு புறப்பட்டுவிட்டது.

63.6 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுவுடன் அங்குலிலிருந்து தெலங்கானாவிற்கு முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றடைந்தது.

61.46 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுவுடன் கூடுதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தில்லிக்கும், ஹரியானாவிற்கும் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

இதுவரை சுமார் 1094 மெட்ரிக் டன் திரவ மருத்துவப் பிராணவாயுவை மகாராஷ்டிரா (174 மெட்ரிக் டன்), உத்தரப் பிரதேசம் (430.51 மெட்ரிக் டன்), மத்தியப்பிரதேசம் (156.96 மெட்ரிக் டன்), தில்லி (190 மெட்ரிக் டன்), ஹரியானா (79 மெட்ரிக் டன்), தெலங்கானா (63.6 மெட்ரிக் டன்) ஆகிய மாநிலங்களுக்கு இந்திய ரயில்வே அனுப்பியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715525

-------


(Release ID: 1715564) Visitor Counter : 240