அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கொவிட்-19 போக்கை வரையறுக்க கணித சூத்திரம் மாதிரியில் பணியாற்றுகின்றனர் விஞ்ஞானிகள்

Posted On: 02 MAY 2021 12:05PM by PIB Chennai

கொவிட்-19 பரவல் போக்கினை விளக்குவதற்காக சூத்திரம் (SUTRA) மாதிரியில் பணியாற்றும் விஞ்ஞானிகளாகிய நாங்கள், கணித மாதிரி கணிப்புகள் தொடர்பான சில உண்மைகளைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ஏனென்றால், இவற்றில் சில தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, தவறாகக் குறிப்பிடப்படுகிறது. ஊடகங்களில் வெளியான சில அறிக்கைகள்சூத்திரம் மாதிரியில் பணியாற்றும் விஞ்ஞானிகள், கொவிட் 2ஆம் அலை குறித்து மார்ச் மாதமே எச்சரித்ததாகவும், ஆனால் அதில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பது போலவும் கூறுகின்றன. இது தவறு.

எங்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு, தேசிய தொற்றுத் தடுப்பு நடவடிக்கையில் அரசுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் மூத்த அதிகாரிகளில் ஒருவர் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி ஒரு கூட்டத்தைக் கூட்டினார்அப்போது எங்களின் சூத்திரம் மாதிரியானது ஏப்ரல் 3வது வாரத்தில் கொவிட் 2ஆம் அலை உச்சத்துக்கு செல்லும் என கணித்துள்ளது என்பதை நாங்கள் சுட்டிக் காட்டினோம், தினசரி பாதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கலாம் என்றும் தெரிவித்தோம்ஆனால் கீழ்கண்ட காரணங்களால், இந்த மாதிரி கணிப்புகள் தவறானவை என்பது தெளிவாகத் தெரிகிறது.

தொற்றுப் பரவலைக் கணிக்க, கணித சூத்திர  மாதிரியில் நாங்கள்  பணியாற்றி கொண்டிருக்கிறோம்தொற்று இயக்கவியல் மற்றும் அதன் பரவல், கால ஓட்டத்தில் கணிசமாக மாற்றம் காணாத வரையிலும்ஒரு கணித மாதிரியானது எதிர்காலத்தை ஓரளவு மட்டுமே கணிக்கும் என்பதைக் குறிப்பிடுவது முக்கியமானது. மருந்து அல்லாத தலையீடுகள் போன்ற பல்வேறு கொள்கை முடிவுகளுடன் தொடர்புடைய மாற்றுச் சூழல்களைக்  கணிப்பதற்கான ஒரு முறையையும் கணித மாதிரிகள் வழங்க முடியும்.

கொவிட்-19- பொறுத்தவரைவைரசின் குணம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறதுஇது போன்ற சூழலில், கொவிட்-19 தொடர்பான எந்தக் கணிப்பும், தொடர்ந்து சரி செய்யப்பட வேண்டும், சில நேரங்களில், தினந்தோறும் சரிசெய்ய வேண்டியிருக்கும்.

நாங்கள் அரசுடன் நெருங்கமாக இணைந்து பணியாற்றுகிறோம். எங்கள் கருத்துக்கள் எப்போதும் சாதகமாகப் பெறப்படுகின்றன. கொவிட்  2ஆம் அலையின் சரியான தன்மையை, எங்களால் முன்கூட்டியே கணிக்க முடியவில்லை என்றாலும்எதிர்காலத்தில் அதன் போக்கைக் கணக்கிடுவதற்கான  எங்கள் முயற்சிகளை நாங்கள் தொடர்கிறோம்.

மனிந்ரா அகர்வால், போராசிரியர், கான்பூர் ஐஐடி மாதுரி கனித்கர், துணைத் தலைவர், ஒருங்கிணைந்த பாதுகாப்புப்படை ஊழியர் அமைப்பு.   எம் வித்யாசகர், பேராசிரியர், ஐதராபாத் ஐஐடி.

மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715485

------



(Release ID: 1715507) Visitor Counter : 337