உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பு மருந்துகளை சோதனை முயற்சியாக டிரோன் மூலம் விநியோகிப்பதற்கு தெலங்கானா அரசுக்கு அனுமதி

Posted On: 30 APR 2021 3:08PM by PIB Chennai

ஆளில்லாத குட்டி விமானங்களை தெலங்கானா அரசு பயன்படுத்துவதற்கு விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகம் நிபந்தனைகளின் அடிப்படையில் அனுமதி அளித்துள்ளன.

கொவிட்-19 தடுப்பு மருந்துகளை சோதனை முயற்சியாக டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் விநியோகிப்பதற்கு தெலங்கானா அரசுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு வருடம் வரையிலோ அல்லது மேற்கொண்டு உத்தரவு வரும் வரையிலோ இந்த அனுமதி அமலில் இருக்கும். அனைத்து நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும்.

முன்னதாக, டிரோன்களை பயன்படுத்தி கொவிட்-19 தடுப்பு மருந்துகளை விநியோகிப்பது குறித்து ஐஐடி கான்பூர் உடன் இணைந்து ஆய்வு செய்வதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது

தடுப்பு மருந்துகளை வேகமாக விநியோகிப்பதற்கும், மேம்பட்ட மருத்துவ வசதிகளை வழங்குவதற்கும் இந்த அனுமதி அளிக்கப்பட்டது.

ஆளில்லாத குட்டி விமானங்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி தொடர்பான பொது அறிவிப்பை  https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2021/apr/doc202143031.pdf எனும் இணைய முகவரியில் காணலாம்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715048

------

 



(Release ID: 1715159) Visitor Counter : 206