தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிற்சாலைப் பணியாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டெண் (2016=100) - மார்ச் 2021

Posted On: 30 APR 2021 3:46PM by PIB Chennai

மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழிலாளர் அலுவலகம், 2021 மார்ச் மாதத்திற்கான, தொழிற்சாலைப் பணியாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணை வெளியிட்டுள்ளது.

நாடெங்கிலும் உள்ள, தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த மையங்களைச் சார்ந்த  சந்தைகளிலிருந்து, தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இந்த குறியீட்டெண் வெளியிடப்படுகிறது.

2021 மார்ச் மாதத்தில் தொழி்ற்சாலைப் பணியாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டெண் (2016=100) 119.6 புள்ளிகள் ஆக அதிகரித்து  இருந்தது. 2021 பிப்ரவரி மாதம் இது 119.0 ஆக இருந்தது.

சமையல் எரிவாயு, பெட்ரோல், பண்ணைக் கோழி, சமையல் எண்ணெய், ஆப்பிள், தேயிலை, பதப்படுத்தப்பட்ட பொட்டல உணவு உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வு காரணமாக குறியீட்டெண் உயர்ந்துள்ளது.

முந்தைய மாதத்தில் 4.48 சதவீதமாக இருந்த பணவீக்கம், 2021 மார்ச் மாதத்தில் 5.64 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேபோன்று, முந்தைய மாதத்தில் 4.64 சதவீதமாக இருந்த உணவு பணவீக்கம் 2021 மார்ச் மாதத்தில் 5.36 சதவீதமாக உயர்ந்துள்ளது.

சமீபத்திய குறியீட்டெண் குறித்து பேசிய மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ் கங்குவார், குறியீட்டெண்  உயர்ந்து இருப்பதன் மூலம், அகவிலைப்படி உயர்வின் வாயிலாக பணியாளர்களின் ஊதியம் உயரும் என்றார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1715062

------



(Release ID: 1715157) Visitor Counter : 194


Read this release in: English , Hindi , Bengali , Punjabi