குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

குறுகிய கால பலனை பார்க்காமல், நீண்ட கால நிலைத்தன்மைக்கு பணியாற்றுங்கள்: வர்த்தக தலைவர்களுக்கு குடியரசுத் துணை தலைவர் அறிவுரை

Posted On: 27 APR 2021 5:20PM by PIB Chennai

குறுகிய கால பலனை தாண்டி, நீண்ட கால நிலைத்தன்மைக்கு பணியாற்றும் வர்த்தகத் தலைவர்கள் தான் உலகத்துக்கு தேவை என குடியரசுத் துணை தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறினார்

இந்திய வர்த்தக கல்வி நிறுவனங்களின் தலைமை பண்பு மாநாட்டை தில்லியிலிருந்து  குடியரசுத் துணை  தலைவர்  திரு எம். வெங்கையா நாயுடு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

கொவிட் தொற்று சவால்களுக்கு மத்தியிலும், இந்த மாநாட்டை நடத்தும்  மேம்பட்ட வர்த்தக கல்லூரிகளின் சங்கம் (AACSB), அமெரிக்க மற்றும் இந்திய கல்வி வளர்ச்சி அமைப்பு(EPSI) ஆகியவற்றுக்கு பாராட்டுக்கள்இந்த சிக்கலான நேரத்தில், நிர்வாக கல்வியில் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை கற்க இந்திய வர்த்தக கல்வி நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

 நமது பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் வர்த்தக கல்வி நிறுவனங்கள்  முக்கிய பங்காற்றுகின்றன. ஏனென்றால், இங்கு தான் எதிர்கால மேலாளர்கள், தலைவர்கள், புதுமை கண்டுபிடிப்பாளர்கள் வளர்க்கப்படுகின்றனர்.

நமது வளர்ச்சி, சுற்றுச்சூழலை அழித்து வரக் கூடாது. புவி வெப்பமயமாவதால், இயற்கை பேரிடர்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இது வர்த்தகத்தையும் பாதிக்கிறது.

கல்வி சமூகத்தை சார்ந்ததாக இருக்க வேண்டும். நிர்வாக படிப்பை படிக்கும் இளம் மாணவர்கள், அருகில் உள்ள கிராமங்களுக்கும் சென்று இந்திய கிராம வர்த்தகம் மற்றும் சமூக பிரச்னைகளை ஆய்வு செய்து,அடையாளம் கண்டு அவற்றுக்கு சாத்தியமான தீர்வுகளை காண வேண்டும்.

வர்த்தகம் மூலம் நாட்டை மேம்படுத்துவதில், இளம் மேலாளர்கள் இடையே தொலை நோக்கு சிந்தனை வேண்டும். சிறப்பான மற்றும் மகிழ்ச்சியான உலகத்திற்கு, வளரும் மேலாளர்கள் இடையேநல்லொழுக்கத்தை உருவாக்குதல்மதிப்பு, பரிவு ஆகியவற்றை ஊக்குவித்தல்  ஆகியவை நமது  வர்த்தக கல்லூரிகளின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

நாட்டில் எம்.பி. பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பது 54 சதவீதமாக உள்ளது என இந்தியா திறன்கள் ஆய்வறிக்கை 2020 தெரிவிக்கிறது. மாணவர்கள் சேர்க்கை மற்றும் வேலை வாயப்புக்கு இடையேயான இந்த இடைவெளியை போக்கும் வழிகளை வர்த்தக கல்லூரிகள்  சிந்திக்க வேண்டும். கல்வி நிறுவனங்களும், தொழில் துறையினரும் பேச்சுவார்த்தையை அதிகரிக்க  வேண்டும். அப்போது உண்மையான வாழ்க்கை நிலவரம் மாணவர்களுக்கு தெரியவரும்.

 மாணவர்களின் மென் திறன்களை அதிகரிக்க வேண்டியது முக்கியம். அது வெற்றிகரமான மேலாளர்களை உருவாக்குவதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

சுதந்திரத்துக்குப்பின்பு, ஹார்வர்டு மற்றும் எம்ஐடி போன்ற அமெரிக்க நிறுவனங்கள், இந்திய வர்த்தக கல்வி நிறுவனங்களுக்கு உதவின. தற்போது அமெரிக்க வர்த்தக கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாக பணியாற்றும் பலரும் இந்தியாவில் பிறந்து கல்வி கற்றவர்களாக உள்ளனர் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருப்பதற்கு இதை நான் ஒரு உதாரணமாக காண்கிறேன்.

கொவிட்-19 சூழல் கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களை காணொலி காட்சி நடைமுறையை பின்பற்ற வைத்துள்ளது. ஆன்லைன் தொடர்பு முறைக்கான இந்த திடீர் மாற்றம், பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது.

கற்பிப்பது மற்றும் அறிவுறுத்துவதை விட சரிபடுத்துவது மற்றும் வழிகாட்டுவதில் வர்த்தக கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். காணொலி கல்வி முறையிலும், விவேகமாக சிந்திப்பது மற்றும் சுயமுடிவெடுக்கும் திறமைகளை  மாணவர்கள் கற்க வேண்டும்.

இவ்வாறு குடியரசுத் துணை தலைவர் திரு வெங்கையா நாயுடு பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1714371

------



(Release ID: 1714408) Visitor Counter : 182