சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19-க்கான இந்திய மரபணு கூட்டமைப்பு, 2021 மார்ச் 26-ல் இருந்து மரபணு வரிசைப்படுத்துதல் தரவுகளை மாநிலங்களுடன் பல முறை பகிர்ந்துள்ளது

Posted On: 16 APR 2021 7:01PM by PIB Chennai

சார்ஸ்-கோவி-2 (கொரோனா வைரஸ்) மரபணு மாற்றங்களை இந்தியாவில் தொடர்ந்து கண்காணிப்பதற்காக 2020 டிசம்பரில் நிறுவப்பட்ட பத்து ஆய்வகங்களின் வலைப்பின்னல் தான் இந்திய சார்ஸ்-கோவி-2 மரபணு கூட்டமைப்பு ஆகும்.

இந்திய சார்ஸ்-கோவி-2 மரபணு கூட்டமைப்பிற்கான விரிவான வழிகாட்டுதல்கள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணையதளத்தில் 2020 டிசம்பர் 27 அன்று வெளியிடப்பட்டது.

கொவிட்-19-க்கான இந்திய மரபணு கூட்டமைப்பு, 2021 மார்ச் 26-ல் இருந்து மரபணு வரிசைப்படுத்துதல் தரவுகளை மாநிலங்களுடன் பல முறை பகிர்ந்துள்ளது.

உதாரணத்திற்கு, ஹிமாச்சலப் பிரதேசத்தின் முடிவுகள் ஏப்ரல் 8 அன்றும், பஞ்சாபின் முடிவுகள் மார்ச் 26 அன்றும், ராஜஸ்தான் முடிவுகள் ஏப்ரல் 10 அன்றும், மகராஷ்டிரா முடிவுகள் 2021 மார்ச் 12 முதல் ஏப்ரல் 16 வரை பல முறையும் தொடர்புடைய மாநிலங்களிடம் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டன.

இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளில் இங்கிலாந்து, பிரேசில், தென் ஆப்பிரிக்கா வைரஸ் மற்றும் உருமாறிய வைரஸ்கள் விடுபடவில்லை.

இது வரை 13,000-க்கும் அதிகமான மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்துவதற்காக இந்திய மரபணு கூட்டமைப்பு ஆராய்ந்துள்ளது.

இந்திய சார்ஸ்-கோவி-2 மரபணு கூட்டமைப்பின் விதிமுறைகளின் படி, ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளில் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட சர்வதேச பயணிகளின் மாதிரிகள், மாநில கண்காணிப்பு அதிகாரிகளால் ஒருங்கிணக்கப்பட்ட சமூக மாதிரிகள் மற்றும் அதிக பாதிப்புள்ள மாவட்டங்களின் மாதிரிகள் ஒட்டுமொத்த மரபணு வரிசைப்படுத்தலுக்காக சேகரிக்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712312

-----


(Release ID: 1712331) Visitor Counter : 284