அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேசிய அளவிலான பருவநிலை பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கை நாளை வெளியீடு
Posted On:
16 APR 2021 1:50PM by PIB Chennai
தேசிய அளவிலான பருவநிலை பாதிப்பு குறித்து விரிவான மதிப்பீட்டு அறிக்கை நாளை (2021, ஏப்ரல் 17ம் தேதி) வெளியிடப்படவுள்ளது.
இந்த பருவநிலை பாதிப்பு மதிப்பீடு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் தீவிர பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்டது. இதில் அளிக்கப்பட்ட பயிற்சிகள் மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சிகள் மூலம் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை பொருத்தமான பருவநிலை நடவடிக்கைகளைத் தொடங்க, கொள்கைகளை உருவாக்குபவர்களுக்கு உதவும். நன்றாக வடிவமைக்கப்பட்ட பருவநிலை மாற்றம் தழுவிய திட்டங்கள் மூலம், நாடு முழுவதும் உள்ள பருவநிலை பாதிப்புக்கு ஆளாகும் மக்களுக்கும் இது பயனளிக்கும்.
அறிவியல் தொழில்நுட்பத் துறை, வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான சுவிஸ் முகமை ஆகியவற்றின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்த தேசிய அளவிலான பயிற்சியில், 24 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 94 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த தேசிய அளவிலான பருவநிலை பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையை அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலாளர் பேராசிரியர் அசுதோஷ் சர்மா நாளை (ஏப்ரல் 17ம் தேதி) வெளியிடுகிறார்.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், பொருத்தமான திட்டங்களை உருவாக்க, பருவநிலை பாதிப்பு மதிப்பீடு ஒரு முக்கியமான பணியாக கருதப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1712220
-----
(Release ID: 1712239)
Visitor Counter : 187