குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
வரவிருக்கும் ‘உகாதி, குடி படாவா, சைத்ர சுக்லாதி, சேதி சந்த், வைசாகி, விசு, புத்தாண்டு, வைஷ்காதி மற்றும் போஹாக் பிஹூ’ ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
12 APR 2021 2:41PM by PIB Chennai
வரவிருக்கும் ‘உகாதி, குடி படாவா, சைத்ர சுக்லாதி, சேதி சந்த், வைசாகி, விசு, புத்தாண்டு, வைஷ்காதி மற்றும் போஹாக் பிஹூ’ ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:
உகாதி, குடி படாவா, சைத்ர சுக்லாதி, சேதி சந்த், வைசாகி, விசு, புத்தாண்டு, வைஷ்காதி மற்றும் போஹாக் பிஹூ’ ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பண்டிகைகள், பாரம்பரிய புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கின்றன மற்றும் நாட்டின் கூட்டு கலாச்சாரம் மற்றும் வளமான பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கின்றன.
ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா மக்கள் இதை ‘உகாதி’ எனவும் மற்றும் கர்நாடக மக்கள் ‘யுகாதி’ எனவும் அழைக்கின்றனர். மகாராஷ்டிராவில், இது குடி படாவா என கொண்டாடப்படுகிறது மற்றும் தமிழ்நாட்டில் இது புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. கேரளாவில் நமது மலையாளி சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் ‘விஷூ’வாக கொண்டாடும் போது பஞ்சாப்பில் இது ‘வைஷாகி’ யாக கொண்டாப்படுகிறது.
ஒடிசாவில் இது ‘பனா சங்க்ராந்தியாக’ அழைக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில், ‘பொய்லா பாய்சாக்’ புதிய ஆண்டில் தொடங்குகிறது மற்றும் அசாமில், ‘போஹாக் பிஹூ’ புத்தாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. பெயர்கள் வேறுபடுகின்றன ஆனால், இந்த பண்டிகையின் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவை ஒன்றாக இருக்கின்றன.
நமது மதங்களின் புனித நூல்கள், இயற்கை மீதான நமது மரியாதையை காட்டும் சம்பவங்கள் நிறைந்தவை. நம் நாட்டில் அறுவடை காலம் என்பது, இயற்கையின் உயிர்ப்பு மற்றும் மிகுதியை கொண்டாடும் நிகழ்வாகும்.
நமது நாட்டில் பண்டிகைகள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நிகழ்வாக எப்போதும் உள்ளது. ஆனால், தற்போதைய கொவிட் தொற்று சூழலில், இந்த பண்டிகையை கொவிட் நெறிமுறைகளை பின்பற்றி கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பண்டிகைகள் நமது நாட்டில் அமைதி, நல்லிணக்கம், செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வரட்டும் என குடியரசு துணைத் தலைவர் கூறியுள்ளார்.
*****************
(Release ID: 1711162)
Visitor Counter : 249