தேர்தல் ஆணையம்
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது
Posted On:
10 APR 2021 6:45PM by PIB Chennai
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. 44 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 15,940 மையங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆனால், கூச் பெகாரில் உள்ள 5-சிதல்குட்சி (எஸ் சி) சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 126-ஆம் வாக்குப்பதிவு மையத்தில் நடைபெற்ற வன்முறை குறித்து சிறப்பு பார்வையாளர்கள் அளித்த அறிக்கையை தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் அங்கு வாக்குப்பதிவை ரத்து செய்தது. விரிவான அறிக்கை எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற 44 தொகுதிகளின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 1,15,81,022 ஆகும். 373 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 35 பொது பார்வையாளர்களும், 9 காவல் துறை பார்வையாளர்களும், 10 செலவின பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்
5 மணி வரை 76.16 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நான்காம் கட்ட வாக்குப்பதிவில் 15,940 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 15,940 கட்டுப்பாட்டுக் கருவிகள் மற்றும் 15,940 விவிபாட் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டன.
விதிகளின்படி அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் முதல் கட்ட சோதனையை வெற்றிகரமாக கடந்தன. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் இவை சோதிக்கப்பட்டன. மாதிரி வாக்குப்பதிவும் நடத்தப்பட்டது.
இன்று காலை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னர் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீண்டும் ஒருமுறை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சோதித்து பார்க்கப்பட்டன. 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு மையங்களில் நடைபெற்ற வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு முறையில் கண்காணிக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1710888
*****************
(Release ID: 1710905)
Visitor Counter : 184