குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
ஈஸ்டரை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவரின் வாழ்த்து செய்தி
प्रविष्टि तिथि:
03 APR 2021 8:00PM by PIB Chennai
ஈஸ்டரை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி பின்வருமாறு:
"இயேசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்ததை குறிக்கும் புனித பண்டிகையான ஈஸ்டரை முன்னிட்டு நமது நாட்டின் மக்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
மனித குலத்தின் மீட்பராக வணங்கப்படும் இயேசு கிறிஸ்து, அன்பு, அமைதி, கருணை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் மூலம் மனித இனத்தை ரட்சிப்பதற்கான பாதைக்கு ஒளியூட்டினார்.
அனைத்து மனிதர்களிடமும் கருணையை காட்டி ஈஸ்டரை நாம் கொண்டாடுவோம். இந்த பண்டிகை நமது வாழ்வில் நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கொண்டு வரட்டும்."
*****************
(रिलीज़ आईडी: 1709389)
आगंतुक पटल : 183