சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
கர்நாடக உயர்நீதி மன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளை நியமித்தார் குடியரசுத் தலைவர்
Posted On:
24 MAR 2021 2:20PM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 224-ஆவது பிரிவின் ஒன்றாம் உட்பிரிவு தமக்கு அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக திரு ராஜேந்திர பதாமிகர் மற்றும் திருமிகு சுஸ்ரீ கசி ஜெயாபுனிஸா மொகியுதீன் ஆகியோரை குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். இவர்கள் இருவரும் தாங்கள் பதவியேற்கும் நாளிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு கூடுதல் நீதிபதிகளாகப் பொறுப்பு வகிப்பார்கள். இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித்துறை 2021 மார்ச் 22 அன்று வெளியிட்டது.
கடந்த 1993-ஆம் ஆண்டு நீதித்துறையில் சேர்ந்த திரு ராஜேந்திர பதாமிகர், 26 ஆண்டுகளில் சிவில், மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக பதவி வகித்துள்ளார். தற்போது பெங்களூரு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளராக அவர் பணியாற்றி வருகிறார்.
திருமிகு சுஸ்ரீ கசி ஜெயாபுனிஸா மொகியுதீன் கடந்த 1993-ஆம் ஆண்டு நீதித்துறையில் இணைந்து, சிவில், முதன்மை மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிபதியாக 26 ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். தற்போது பெங்களூரு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் லஞ்ச ஒழிப்புப் பதிவாளராக அவர் பணியாற்றி வருகிறார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1707199
-----
(Release ID: 1707308)
Visitor Counter : 189