தேர்தல் ஆணையம்

கேரளாவில் ஓய்வு பெறும் மாநிலங்களவை உறுப்பினர்களின் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் அறிவிப்பு

प्रविष्टि तिथि: 17 MAR 2021 2:04PM by PIB Chennai

கேரளாவில் ஓய்வு பெறும் மாநிலங்களவை உறுப்பினர்களின் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அப்துல் வஹாப், கே.கே.ராகேஷ், வயலார் ரவி ஆகியோர் ஏப்ரல் 21ம் தேதியுடன் ஓய்வு பெறுகின்றனர்.

இதனால் இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான  தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தேர்தல், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இந்த தேர்தலை, கொவிட் நெறிமுறைகளை பின்பற்றி நடத்தும்படி, கேரள தலைமைச் செயலாளருக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த தேர்தலின்  பார்வையாளராக, கேரள தலைமை தேர்தல் அதிகாரியை, தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1705430

-------


(रिलीज़ आईडी: 1705498) आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , हिन्दी , Malayalam