சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தொற்றுநோயுடன் தொடர்புடைய சமூக களங்கத்தை போக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் : மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் பதில்

Posted On: 16 MAR 2021 1:24PM by PIB Chennai

மத்திய சுகாதார மற்றும் குடும்பலநலத்துறை இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது:

கொவிட்-19 தொற்றுடன் தொடர்புடைய களங்கம் மற்றும் கொவிட்-19 நோயாளிகள், கொவிட்-19 ஒழிப்பு பணியில் ஈடுபட்ட சுகாதார தொழிலாளர்கள் சந்தித்த பாகுபாடுகள் ஆகியவை மத்திய அரசு மேற்கொண்ட கொவிட்-19 தகவல் தொடர்பு யுக்தியின் முக்கிய கருப்பொருளாக உள்ளன.

இந்த களங்கத்துக்கு எதிரான பிரச்சாரத்தை முக்கிய அமைப்புகளுடன் சேர்ந்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடங்கியது. இது தொடர்பாக கீழ்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

 * களங்கம் மற்றும் பாகுபாடு தொடர்பான தகவல்கள், முன்பே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி தகவல்கள் மூலம் 12 லட்சம் ஆஷா ஊழியர்கள் மற்றும் துணை செவிலியர்களிடம் தெரிவிக்கப்பட்டது.  

* சுகாதார சேவை பணியாளர்கள் பற்றிய உத்வேக கதைகள் இணையதளம், தூர்தர்ஷன், வானொலி மற்றும் இதர அமைப்புகள் மூலம் பரப்பப்பட்டன.

* களங்கத்தை போக்கும் முக்கிய தகவல்களை கொண்டு செல்ல ஊடகம், சமூக வானொலி, இளைஞர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக சுகாதார பணியாளர் அமைப்புகள் உதவின.

* கொவிட்-19 தொடர்பான களங்கத்தை போக்கும் பல ஆடியோ, வீடியோக்கள், தகவல் கையேடுகள், சமூக ஊடக தகவல்கள் ஆகியவை உருவாக்கப்பட்டு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணையதளம், சமூக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன மற்றும் மாநில அரசு அமைப்புகள் மூலம் பரப்பப்பட்டன.

* கொவிட்-19 நோயாளிகளின் வீட்டுக்கு வெளியே போஸ்டர்கள் அல்லது இதர அறிவிப்புகள் ஒட்டக் கூடாது என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் ஆலோசனை வழங்கியது.

* கொவிட்-19 பெருந்தொற்று அவசர சட்ட திருத்தம் 2020, கடந்த 2020 ஏப்ரல் 22-ம் தேதி பிரகடனம் செய்யப்பட்டது. மேலும், இந்த அவசர சட்டம், நாடாளுமன்றத்தில் கடந்த 2020 செப்டம்பர் 29-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்தம் மற்றும் இச்சட்டம், சமூக பாகுபாடு செயல்களில் ஈடுபடுவோர், சுகாதார பணியாளர்களுக்கு தொந்தரவு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வழி செய்கிறது.

இவ்வாறு மத்திய சுகாதாரம் மறறும் குடும்ப நல  இணையமைச்சர் திரு அஸ்வினி குமார் சவுபே தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1705063

-----



(Release ID: 1705114) Visitor Counter : 161