பிரதமர் அலுவலகம்

‘விடுதலையின் அம்ருத் மகோத்சவத்தின்’ முன்னோட்ட நிகழ்ச்சிகள் தொடக்க விழாவில் பிரதமரின் உரை

Posted On: 12 MAR 2021 4:22PM by PIB Chennai

மேடையில் அமர்ந்திருக்கும் குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ் விராத், முதல்வர் திரு விஜய் ரூபானி, மத்திய அமைச்சர் திரு பிரகலாத் படேல், எம்.பி. திரு சி.ஆர், படேல், அகமதாபாத் புதிய மேயர்  திரு கிரித் சிங் பாய், சமர்மதி அறக்கட்டளை அறங்காவலர் திரு கார்த்திகேய சாராபாய், சபர்மதி ஆசிரமத்துக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அம்ரித் மோடி, அனைத்து பிரமுகர்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு வணக்கம். 

இன்று விடுதலையின் அம்ருத் திருவிழாவின் முதல் நாள்.  2022, ஆகஸ்ட் 15ம் தேதிக்கு 75 வாரங்களுக்கு முன்பாகவே, அம்ருத் திருவிழா தொடங்கி விட்டது. இது 2023 ஆகஸ்ட் 15ம் தேதி வரை தொடரும். 

இந்த அம்ருத் விழா, இன்று ஒரே நேரத்தில் பல இடங்களில் தொடங்குகிறது.

அந்தமான் செல்லுலார் சிறை, அருணாச்சலப் பிரதேசத்தில் ஆங்கிலோ - இந்திய போர் நடந்த  கேகர் மான்யிங், மும்பை ஆகஸ்ட் கிரந்தி மைதானம், பஞ்சாப்பில் உள்ள ஜாலியன் வாலாபாக், உத்தரப் பிரதேசத்தில் மீரட், ககோரி மற்றும் ஜான்சி ஆகிய இடங்களிலும் இந்த விழா தொடங்குகிறது. நாடு முழுவதும் சுதந்திர போராட்ட உணர்வு மற்றும் தியாகம் மீண்டும் எழுப்பப்பட்டது போல் தோன்றுகிறது.

இந்தப் புனித நாளில், காந்திஜி மற்றும் சுதந்திர போராட்டத்துக்காக தியாகம் செய்த ஒவ்வொருவருக்கும், நாட்டை வழிநடத்திய பிரபல தலைவர்களுக்கும், சுதந்திரத்துக்கு பின்பும், நாட்டைக் காக்க உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கும் நான் வணக்கம் செலுத்துகிறேன்.

75 ஆண்டுகளில் சுதந்திர இந்தியாவின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நான் தலை வணங்குகிறேன்.

நண்பர்களே,

இந்த விழாவில் இந்தியாவின் பாரம்பரியம், சுதந்திர போராட்டத்தின் நிழல் மற்றும் சுதந்திர இந்தியாவின் முன்னேற்றம் ஆகியவை உள்ளன. எனவே, உங்கள் முன் நிகழ்த்தப்படும் நிகழ்ச்சியில், அம்ருத் விழாவின் 5 தூண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. 

சுதந்திரப் போராட்டம், 75ம் ஆண்டில் கருத்துக்கள், 75ம் ஆண்டில் சாதனைகள், 75ம் ஆண்டில் செயல்பாடுகள், 75ம் ஆண்டில் தீர்மானங்கள் ஆகியவைதான் இந்த 5 தூண்கள். இவை சுதந்திர இந்தியா முன்னேறுவதற்கான கனவுகளையும், கடமைகளையும் தூண்டும். இந்த தகவலின் அடிப்படையில், அம்ருத் விழாவின் இணையதளம், ராட்டை திட்டம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளது. 

சகோதர , சகோதரிகளே,

சுயமரியாதை மற்றும் தியாகத்தின் பாரம்பரியத்தை, அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுத்து அவர்களை தொடர்ச்சியாக தூண்டும்போதுதான், நாட்டின் பெருமை உணர்வுபூர்வமாக இருக்கும் என்பதை வரலாறு கண்டுள்ளது.

கடந்தகால அனுபவங்கள் மற்றும் பாரம்பரிய பெருமைகளுடன் தொடர்பு படுத்தும்போதுதான் நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

பெருமைக்கொள்ள இந்தியாவுக்கு வளமான வரலாறு, உணர்வுபூர்வமான கலாச்சார பாரம்பரியம் என்ற ஆழ்ந்த களஞ்சியம் உள்ளது. ஆகையால் இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிகழ்ச்சி, தற்போதைய தலைமுறையினருக்கு ஒரு அமுதம் போல் இருக்க வேண்டும். அது நாட்டுக்காக வாழ வேண்டும், ஒவ்வொரு நொடியும், நாட்டுக்காக எதையாவது செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்த வேண்டும். 

நண்பர்களே, ,

துக்கம், துன்பம்மற்றும் அழிவை விட்டுவிட்டு நாம் அழியாமையை நோக்கி செல்ல வேண்டும் என நம் வேதங்களில் கூறப்பட்டுள்ளது. இதுவும், சுதந்திரத்தின் அம்ருத் விழாவின் தீர்மானம்தான்.

 விடுதலையின்  அம்ருத் மகோத்சவம் என்றால், சுதந்திர சக்தியின் அமுதம்.  சுதந்திரப்  போராட்ட வீரர்களின் தூண்டுதலின் அமுதம். புதிய யோசனைகள் மற்றும் உறுதிமொழிகளின் அமுதம் மற்றும் தற்சார்பு இந்தியாவின் அமுதம்.  ஆகையால், இந்த விழா நாட்டை எழுச்சியூட்டுவதாகவும், சிறந்த நிர்வாகத்தின் கனவை நிறைவேற்றுவதாகவும்உலக அமைதி மற்றும் மேம்பாட்டு விழாவாகவும் உள்ளது.

நண்பர்களே,

தண்டி யாத்திரை நாளில் அம்ருத் திருவிழா தொடங்கப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூறும் யாத்திரையும் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளது. காந்திஜியின் இந்த யாத்திரை, சுதந்திர போராட்டத்துக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது. இது மக்களை திரட்டியது. இந்த ஒரு யாத்திரை இந்தியாவின் சுதந்திரம் குறித்த எண்ணத்தைஉலகம் முழுவதும் பரப்பியது. இது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் காந்திஜியின் தண்டி யாத்திரைசுதந்திரத்தை வலியுறுத்தியதோடு இந்தியாவின் இயல்பு மற்றும் நெறிமுறைகளையும் வலியுறுத்தியது.

உப்பை  அதன் விலை அடிப்படையில் ஒருபோதும் மதிப்பிடப்பட்டதில்லை. இந்தியர்களை பொறுத்தவரைஉப்பு என்றால் மரியாதை, நம்பிக்கை, விசுவாசம், உழைப்பு, சமத்துவம், மற்றும் தன்னம்பிக்கை  என்று அர்த்தம். அந்த நேரத்தில், உப்பு தற்சார்பு இந்தியாவின் அடையாளமாக இருந்தது. இந்தியாவின் மதிப்புகளுடன், தன்னம்பிக்கையையும் ஆங்கிலேயர்கள் புண்படுத்தினர்.  இங்கிலாந்தில் இருந்து வரும் உப்பை சார்ந்திருக்க வேண்டிய நிலையே  இந்திய மக்களுக்கு ஏற்பட்டது. நாட்டின் இந்த நீண்ட வலியையும் மக்கள் உணர்வுகளையும் புரிந்து கொண்ட காந்திஜி, அதை ஒரு இயக்கமாக மாற்றினார்.

நண்பர்களே,

கடந்த 1857ம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்காக நடந்த முதல் போர், வெளிநாட்டிலிருந்து மகாத்மா காந்தி திரும்பியது, சத்தியாகிரகத்தின் வலிமையை நாட்டுக்கு நினைவூட்டியது, முழு சுதந்திரத்துக்கு லோக்மான்ய திலக் விடுத்த அழைப்பு, சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் நடந்த தில்லி பேரணி, தில்லி செல்வோம் கோஷம் போன்ற சுதந்திர போராட்டத்தின் முக்கிய தருணங்களை  இந்தியாவால் இன்றும் மறக்க முடியாது.

1942ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் மறக்க முடியாதது. இது போல் பல சம்பவங்களில் இருந்து நாம் ஊக்குவிப்பும், சக்தியும் பெறுகிறோம்.  உணர்வுடன் போரிட்ட பல தலைவர்களுக்கு, நாடு ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்துகிறது.

மங்கல் பாண்டே, ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து போராடிய ராணி லட்சுமிபாய், கிட்டூர் ராணி சென்னம்மா, சந்திர சேகர் ஆசாத், பகத் சிங், சுக்தேவ், ராஜ்குரு, அஸ்வகுல்லாகான், குரு ராம் சிங், பால் ராமசாமி, மற்றும் மக்கள் தலைவர்களான பண்டித நேரு, சர்தார் படேல், பாபாசாகேப் அம்பேத்கர், சுபாஸ் சந்திர போஸ், மவுலானா ஆசாத், கான் அப்துல் கபார் கான், வீர் சாவர்கர் போன்ற தலைவர்கள் சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகள்.

 இன்று, அவர்களின் கனவுகளை, நனவாக்குவதற்குஅவர்களிடமிருந்து கூட்டுத் தீர்மானத்தையும் உத்வேகத்தையும் நாம் பெறுகிறோம். 

நண்பர்களே,

நமது சுதந்திரப் போராட்டத்தில் பல போராட்டங்கள் உள்ளன. அவற்றில் பல போராட்டங்கள் பற்றி குறிப்புகள் இல்லை. ஒவ்வொரு போராட்டமும் சக்திவாய்ந்தது.

சுதந்திர இயக்கத்தின் சுடரை தொடர்ந்து தூண்டும் பணியை, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும்  நமது ஆச்சார்யாக்கள், முனிவர்கள், ஆசிரியர்கள் செய்தனர்.

இதே வழியில், தேசிய அளவிலான சுதந்திர இயக்கத்துக்கான தளத்தை பக்தி இயக்கம் தயார் செய்தது. சைதன்ய  மகாபிரபு, ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீமந்த் சங்கர் தேவ் ஆகியோர் தேசிய அளவிலான சுதந்திர போராட்டத்துக்கான தளத்தை உருவாக்கினர்.

 

இதேபோல், அனைத்து பகுதியில் உள்ள முனிவர்களும், தேசிய சுதந்திர போராட்ட உணர்வுக்கு தங்கள் பங்களிப்பை அளித்தனர். நாடு முழுவதும் ஏராளமான தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் கணக்கில் அடங்காத தியாகங்களை செய்தனர்.  தமிழகத்தைச் சேர்ந்த 32 வயது கொடிகாத்த குமரன், ஆங்கிலேயர்கள் தலையில் சுட்டபோது, தேசியக் கொடியை கீழே விழாமல் பிடித்திருந்தார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராடிய முதல் மகாராணி தமிழகத்தைச் சேர்ந்த வேலு நாச்சியார் .

ஆங்கிலேயர் ஆட்சி மடிய, நமது நாட்டின் பழங்குடியினரும் வீரத்துடன் தொடர்ந்து பணியாற்றினர். ஜார்கண்ட்டில், பிர்சா முண்டா ஆங்கிலேயர்களுக்கு எதிராக செயல்பட்டார்.

சந்தல் இயக்கத்தை முர்மு சகோதரர்கள் நடத்தினர்.  ஒடிசாவில், சக்ரா பிசாய், ஆங்கிலேயருக்கு எதிராக போராடினார்.

காந்திய கொள்கைகள் மூலம் லட்சுமண் நாயக் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  ஆந்திராவில் ராம்பா இயக்கம் மூலம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய மன்யம் விருது அல்லூரி சிரராம் ராஜு, மிசோரம் மலைப் பகுதியில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய பசல்தா குங்சேரா போன்றோர் அறியப்படாத தலைவர்கள். 

நண்பர்களே,

நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு பகுதியிலும், நடந்த சுதந்திர போராட்ட வரலாற்றை பாதுகாக்க கடந்த 6 ஆண்டுகளாக நாடு  உணர்வுப்பூர்வமான முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

தண்டி யாத்திரையுடன் தொடர்புடைய இடத்தை புதுப்பிக்கும் பணி 2 ஆண்டுகளுக்கு முன்பு முடிந்தது.  நாட்டின் முதல் சுதந்திர அரசு ஏற்பட்டவுடன், அந்தமானில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மூவர்ணக் கொடியை ஏற்றிய இடமும் புதுப்பிக்கப்படுகிறது. சுதந்திர போராட்டத்துக்குப்  பின்புதான் அந்தமான் நிகோபார்  தீவுகளுக்கு பெயர் வைக்கப்பட்டது.

பாபா சாகேப்புடன் தொடர்புடைய இடங்கள் பஞ்சதீர்த்தாவாக மேம்படுத்தப்பட்டுள்ளது.  ஜாலியன் வாலாபாக் நினைவிடம் மற்றும்  பைகா இயக்கம் நினைவிடம் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், நாம் கடின உழைப்பு மூலம் நம்மை நிருபித்துள்ளோம். நமது அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக பாரம்பரியங்களால் நாம் பெருமிதம் அடைகிறோம். ஜனநாயகத்தின் தாயான இந்தியா, ஜனநாயகத்தை வலுப்படுத்த இன்னும் முன்னோக்கி செல்கின்றது. இந்தியாவின் சாதனைகள் புரிய, ஒட்டு மொத்த மனித குலத்துக்கும் நம்பிக்கை அளிக்கின்றன.

இந்தியாவின் வளர்ச்சி பயணத்தில், தற்சார்பு உணர்வு நிறைந்திருக்கிறது.  அது உலகின்  வளர்ச்சி பயணத்துக்கும் உந்துதலை அளிக்க  உள்ளது .

நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் நாட்டின் முயற்சிகளை நிறைவேற்றும் பொறுப்பும் இளைஞர்களுக்கும், அறிஞர்களுக்கும்  உள்ளது.

சுதந்திரப் போராட்டத்தின் சாதனைகளை  உலகுக்கு காட்ட வேண்டும்.   பழங்காலத்து தனிச்சிறப்பான கதைகளை ஆராய்ந்து அவற்றுக்கு  கலை, இலக்கியம், நாடகம், மற்றும் திரைத்துறை மற்றும் டிஜிட்டல் பொழுதுபோக்கு துறையை சேர்ந்தவர்கள் உயிர் கொடுக்க வேண்டும். 

சுதந்திரத்தின் அம்ருத் விழாவில்  நாட்டின் 130 கோடி மக்களும் கலந்து கொள்ளும்போது, அவர்கள் ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களால் ஊக்குவிக்கப்படுவர் என்பது உறுதி. உயரமான லட்சியங்களை இந்தியா அடைய வேண்டும்.  இன்று இந்த விழா சிறிய அளவில் தொடங்கியுள்ளது. இது மிகப் பெரிய விழாவாக உருவெடுக்கும் என நம்புகிறேன். 

இது நமது நாடு முன்னோக்கி செல்வதற்கு ஒவ்வொரு  இந்தியரின், நிறுவனத்தின், இயக்கத்தின்  தீர்மானமாக  இருக்க வேண்டும்.

இதுதான் நமது சுதந்திர போராட்ட வீரர்களுக்கு நாம் செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும்.

வாழ்த்துக்களுடன், உங்கள் அனைவருக்கும் நன்றி.  என்னுடன் சேர்ந்து முழக்கமிடுங்கள்.

பாரத் மாதா கி- ஜே! பாரத் மாதா கி- ஜே! பாரத் மாதா கி- ஜே!

வந்தே - மாதரம்! வந்தே - மாதரம்! வந்தே - மாதரம்!

ஜெய் ஹிந்! - ஜெய் ஹிந்! ஜெய் ஹிந்! ஜெய் ஹிந்! ஜெய் ஹிந்!

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1704362

*****************(Release ID: 1704715) Visitor Counter : 705