பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி இலங்கைக்கு பயணம்

प्रविष्टि तिथि: 03 MAR 2021 4:57PM by PIB Chennai

இலங்கை விமானப்படையின் தளபதி ஏர் மார்ஷல் சுதர்சன பத்திரனாவின் அழைப்பை ஏற்று இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதௌரியா இன்று இலங்கை சென்றடைந்தார்.

இலங்கை விமானப்படையின் 70-வது ஆண்டு விழா மார்ச் 2-ஆம் தேதி கொண்டாடப்பட்டதோடு,  மார்ச் 5-ஆம் தேதி அதிபர் வண்ணங்கள் பட்டை  சின்னம் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன

தமது பயணத்தின் போது இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி, மார்ச் 3 ஆம் தேதி நடைபெறும் விமான சாகச நிகழ்ச்சியின் துவக்க விழாவில் கலந்துகொண்டு விமானங்களின் சாகசங்கள் மற்றும் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுவார்.

கொழும்புவின் காலேவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்திய விமானப்படையின் சூரியகிரண்  மற்றும் சாரங் விமான சாகச குழுக்களும்,  தேஜஸ் இலகு ரக விமானமும் பங்கேற்கும். இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு இலங்கை விமானப்படையின் பொன்விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட இந்திய விமானப்படையின் சூரியகிரண்  சாகச குழுவின் செயல்திறனை இந்த நிகழ்ச்சி நினைவூட்டும்.

தமது இரண்டு நாள் பயணத்தின் போது இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி, இலங்கை நாட்டு இராணுவ படைகளின் தலைவர்களுடன் உரையாடுவார்.‌ பல ஆண்டுகளாக இந்திய விமானப் படையும், இலங்கை விமானப் படையும் தரை மற்றும் விமான பயிற்சி, ராணுவ கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தங்களது அனுபவங்களை பகிர்ந்தும், இந்தத் துறைகளில் ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

விமான சாகச நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதியின் பங்கேற்பு இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்தும்.

இரு நாடுகளின் பரஸ்பர விருப்பத்தின் பேரில் புதிய துறைகளில் ஒத்துழைப்பு ஏற்படவும் இந்த பயணம் உதவிகரமாக இருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1702240

********************


(रिलीज़ आईडी: 1702298) आगंतुक पटल : 463
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Malayalam