பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்

இந்தியாவில் எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 25 FEB 2021 1:05PM by PIB Chennai

இந்தியாவில் எளிதில் தொழில் செய்வதை அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஒழுங்குமுறை அமலாக்கத்தை மேம்படுத்தவும், தரவு பரிமாற்றத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பெருநிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகமும், மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியமும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன

பெருநிறுவனங்கள் விவாகரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் திரு மனோஜ் பாண்டே, மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு பி.பி.குப்தா ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இரு தரப்பின் தரவுகளை ஒருவொருக்கொருவர் பகிர்ந்து கொள்வதன் மூலம் இரு அமைப்புகளும் பயனடையும். இந்த தரவு பகிர்வு மூலம் ஏற்றுமதி, இறக்குமதி பரிமாற்ற விவரங்கள் மற்றும் கம்பெனிகளின் ஒருங்கிணைந்த நிதி அறிக்கைகளை அறிந்து கொள்ள முடியும். பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை நவீன வசதிகளுடன் எம்சிஏ21 3 இணையளத்தை தொடங்கியுள்ள நிலையில் இந்த தரவு பகிர்வு முக்கியத்துவம் பெறுகிறது. இது இந்தியாவில் எளிதாக தொழில் செய்வதை அதிகரிக்கும் மற்றும் ஒழுங்குமுறை அமலாக்கத்தை மேம்படுத்தும்.

இதேபோல் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியமும், நவீன மறைமுக வரிவிதிப்பு ஆய்வு முறையை (ADVAIT - Advanced Analytics in Indirect Taxation) தொடங்கியுள்ளது. இதன் மூலம் வரிசெலுத்துவோரின் முழுவிவரத்தையும் அறிந்து கொள்ள முடியும்

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், இரு அமைப்புகளும், தானியங்கி முறையில் சீராக தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700715



(Release ID: 1700885) Visitor Counter : 224