பாதுகாப்பு அமைச்சகம்
இந்திய-அமெரிக்க நிர்வாக வழிகாட்டுதல் குழுவின் 24-வது கூட்டம்
Posted On:
25 FEB 2021 4:30PM by PIB Chennai
இந்திய-அமெரிக்க நிர்வாக வழிகாட்டுதல் குழுவின் 24-வது கூட்டம் 2021 பிப்ரவரி 22 முதல் 24 வரை புதுதில்லியில் நடைபெற்றது.
அமெரிக்க ராணுவத்தில் இருந்து 12 பேர் கொண்ட குழு நேரடியாகவும், அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் இருந்து 40 அதிகாரிகள் காணொலி மூலமும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பசிபிக் அமெரிக்க ராணுவத்தின் துணை தலைமை தளபதி, மேஜர் ஜெனரல் டேனியல் மாக்டேனியல் அமெரிக்க குழுவுக்கு தலைமை வகித்தார். இந்திய தரப்பில் இருந்து 37 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் ஒரு வருடம் அமெரிக்காவில் ஒரு வருடம் என இக்குழுவின் கூட்டம் ஒவ்வொரு வருடமும் நடைபெறுகிறது. ராணுவங்களுக்கு இடையேயான இக்கூட்டத்தில் ராணுவ ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது.
பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் பரஸ்பர ஆர்வம் சார்ந்த தற்போதைய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கொரோனா கட்டுப்பாடுகளின் காரணமாக முதல் முறையாக நேரிலும் மெய்நிகர் முறையிலும் கூட்டம் நடைபெறுகிறது.
ராணுவ ஒத்துழைப்பு மற்றும் பொதுவான விஷயங்கள் குறித்து இரு தரப்பிலிருந்தும் இக்கூட்டத்தின் போது விவாதிக்கப்பட்டது.
(Release ID: 1700848)
Visitor Counter : 232