ரெயில்வே அமைச்சகம்
தனது யூடிஎஸ் மொபைல் செயலியை இந்திய ரயில்வே மீண்டும் அறிமுகப்படுத்துகிறது
Posted On:
25 FEB 2021 4:27PM by PIB Chennai
பயணச்சீட்டு மையங்களில் கூட்டம் சேருவதைத் தவிர்க்கவும், சமூக இடைவெளி விதிமுறைகள் சுமூகமாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும், யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் முன்பதிவில்லாத பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் முறையை இந்திய ரயில்வே மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
முன்பதிவில்லாத ரயில் சேவைகளை படிப்படியாக இந்திய ரயில்வே மீண்டும் செயல்படுத்தி வருகிறது.
முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வாங்கும்போது பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்கவும், சமூக இடைவெளி விதிகள் பின்பற்றப்படுவதை உதவி செய்யவும், புறநகர் பிரிவுகளில் மட்டுமின்றி பிராந்திய ரயில்வேக்களின் முன்பதிவில்லா ரயில் சேவைகளிலும் யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் முறையை இந்திய ரயில்வே மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பிராந்திய ரயில்வேக்களால் முன்பதிவில்லாத ரயில் சேவைகள் எங்கெல்லாம் அறிமுகப்படுத்தப்படுகிறதோ, அங்கெல்லாம் உகந்த முறையில் யூடிஎஸ் மொபைல் செயலி மூலம் பயணச் சீட்டுகளை பெற்றுக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
(Release ID: 1700847)
Visitor Counter : 231