மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

16-வது ஃபிக்கி உயர்கல்வி உச்சிமாநாடு 2021: மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ துவக்க உரை

प्रविष्टि तिथि: 25 FEB 2021 3:57PM by PIB Chennai

இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் 16- வது உயர்கல்வி உச்சிமாநாடு 2021-இல் மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால்நிஷாங்க்இன்று துவக்க உரையாற்றினார்.

 இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு, மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஆகியவை இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

உயர்கல்வி @ 2030: தாங்குதன்மை, புதுமை, நிலைத்தன்மை, நிர்மானம்என்பது இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளாகும்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 21-ஆம் நூற்றாண்டின் தேவைகளை எதிர்கொள்ளவதற்கான மாற்றங்களை தேசிய கல்வி கொள்கை 2020 வழங்குவதாகக் கூறினார்.

அரசு இந்த கொள்கையை தயாரித்துள்ள போதும் இதை முறையாக அமல்படுத்துவதில் தனியார் துறை முக்கிய பங்கு வகிக்கும் என்று அவர் தெரிவித்தார்.

அணுகுதல், சமவாய்ப்பு, தரம், குறைந்த கட்டணம் மற்றும் பொறுப்புணர்வுடன் கூடிய அடிப்படைத் தூண்களால் இந்த புதிய கல்விக் கொள்கை, 2030-க்குள் நிலையான வளர்ச்சியை எட்டுவதற்கான செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஏற்ப இந்தியாவை வலிமையான ஆற்றல் மிக்க சமுதாயம் மற்றும் உலகளவில் அறிவாற்றலில் சிறந்த சக்தியாக மாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது”, என்று திரு பொக்ரியால் கூறினார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700769


(रिलीज़ आईडी: 1700845) आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi , Telugu