எஃகுத்துறை அமைச்சகம்

தற்சார்பு இந்தியாவின் உருவாக்கத்தில் உலோகங்கள் மற்றும் சுரங்கத் துறைகள் முக்கிய பங்கு வகிக்கலாம்: மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான்

Posted On: 24 FEB 2021 2:43PM by PIB Chennai

தற்சார்பு இந்தியாவின் உருவாக்கத்தில் உலோகங்கள் மற்றும் சுரங்கத் துறைகள் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

58-வது தேசிய உலோகவியலாளர் தினம் மற்றும் இந்திய உலோகக் கழகத்தின் 74-வது ஆண்டு தொழில்நுட்பக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், துடிப்பான மற்றும் வளர்ந்துவரும் இந்தத் துறை, ஏராளமான ஆற்றல் வளங்களைப் பெற்றுள்ளதுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உகந்ததாக விளங்குகிறது என்று தெரிவித்தார்.

சிறப்பு எஃகுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகையை அரசு அறிவித்திருப்பதாகவும், இந்த மிகப்பெரும் சீர்திருத்தத்தின் மூலம் உள்நாட்டு தயாரிப்புகள் பெரிதும் வளர்ச்சி அடையும் என்றும் திரு. பிரதான் தெரிவித்தார்.

இந்த சிறப்பான முன்முயற்சியை முழுதும் பயன்படுத்திக்கொண்டு நாட்டில் புதிய தயாரிப்பு சூழலியலை உருவாக்குமாறு தொழில் துறையினருக்கு அமைச்சர் அழைப்பு விடுத்தார்.

அபரிமிதமான தாது வளங்கள் நாட்டில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

 

 இந்தியாவின் இயற்கை வளங்கள் குடிமக்களுக்கே உரியது என்பதில் அரசு மிகத் தெளிவாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

 “இயற்கை வளங்களின் ஒதுக்கீட்டிற்கு வெளிப்படையான, பொறுப்புத் தன்மையுடன் கூடிய முறையை நாங்கள் பின்பற்றினோம்என்று அவர் கூறினார்.

2021-ஆண்டு நிதிநிலை அறிக்கை, எப்போதும் இல்லாத வகையில் வளர்ச்சிக்கு உகந்ததாக உள்ளது என்று கூறிய திரு பிரதான், எதிர்காலத்திற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேம்பட்ட எஃகுகள் மற்றும் உலோகக்கலவைகள் துறையின் தேவைகளை உள்நாட்டிலேயே பூர்த்தி செய்யவும், ஏற்றுமதிகளை அதிகரிக்கவும், அறிவுசார் சொத்துரிமை மற்றும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700414


(Release ID: 1700533) Visitor Counter : 137