ஆயுஷ்
3 ஆய்வு திட்டங்களின் காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளது ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ தாவர வாரியம் (NMPB)
Posted On:
24 FEB 2021 4:06PM by PIB Chennai
3 ஆய்வு திட்டங்களின் காப்புரிமைக்கு, ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய மருத்துவ தாவர வாரியம் (NMPB) விண்ணப்பித்துள்ளது.
“மருத்துவ தாவரங்களின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நிலையான மேலாண்மை” குறித்த மத்திய பிரிவு திட்டத்தின் (சிஎஸ்எஸ்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் கீழ், இந்த ஆய்வு திட்டங்களுக்கான நிதியுதவி அளிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பல ஆராய்ச்சிகளுக்கு மத்திய பிரிவு திட்டத்தின் கீழ், தேசிய மருத்துவ தாவர வாரியம் நிதியுதவி அளிக்கிறது.
இந்த நிதியுதவி ஆராய்ச்சி திட்டங்களின் கீழ், இதுவரை 3 தனிச்சிறப்பான புதுமை திட்டங்களை காப்புரிமைக்கு விண்ணப்பிக்க தேசிய மூலிகை தாவர வாரியம் முடிவு செய்துள்ளது.
அவைகள் 1. பேல் என அழைக்கப்படும் ஏகிள் மார்மெலோஸ் மரத்திலிருந்து இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றங்களின் உயிர் உற்பத்தி;
(2.) ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் 10 வேர்களின் மரங்களில் இருந்து இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றங்களின் விட்ரோ உற்பத்தி,
(3.) டியோஸ்கோரியா புளோரிபூண்டாவிலிருந்து புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு மருந்துகள் உருவாக்கம் .
இதில் முதல் 2 ஆராய்ச்சி திட்டங்கள், கோவையில் உள்ள வன மரபியல், மற்றும் மர வளர்ப்பு மையத்தை (Institute of Forest Genetics and Tree Breeding (IFGTB) சேர்ந்தவை.
3வது ஆராய்ச்சி திட்டத்தை லக்னோவில் உள்ள , மருத்துவ மற்றும் நறுமண தாவரங்களின் நிறுவனம் (Central Institute of Medicinal and Aromatic Plants (CIMAP), மேற்கொண்டது.
இது குறித்து கருத்து தெரிவித்த தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ‘‘இது எங்கள் குழுவின் ஆரம்ப கட்ட முயற்சிதான். வரும் நாட்களில், இன்னும் அதிக காப்புரிமைக்கு விண்ணப்பிப்போம்’’ என்றார்.
காப்புரிமைக்கு விண்ணப்பித்ததற்காக தேசிய மருத்துவ தாவர வாரிய குழுவினருக்கு ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700439
(Release ID: 1700506)
Visitor Counter : 170