பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் குழு கூட்டம்: ரூ. 13,700 கோடி மதிப்பிலான ஆயுதங்கள், தளவாடங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல்
प्रविष्टि तिथि:
23 FEB 2021 5:03PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையில் புது தில்லியில் இன்று நடைபெற்ற பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் குழுவின் கூட்டத்தில் ரூ. 13,700 கோடி மதிப்புள்ள பல்வேறு ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை இந்திய ராணுவம், இந்திய கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அனைத்து ஆயுதங்களும், தளவாடங்களும் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்படும். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ வடிவமைத்து உருவாக்கிய தளங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
தற்சார்பு இந்தியாவின் இலக்குகளை அடையும் நோக்கத்தில் பாதுகாப்புத் தளவாடங்களை விரைவாக உரிய காலத்திற்குள் கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக அனைத்து ஆயுதங்கள், தளவாடங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தங்களை (வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளைத் தவிர்த்து) இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற பாதுகாப்புத் தளவாடங்கள் கொள்முதல் குழு ஒப்புதல் வழங்கியது. இது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடன் ஆலோசித்து அமைச்சகம் விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்யும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1700215
(रिलीज़ आईडी: 1700316)
आगंतुक पटल : 367