பாதுகாப்பு அமைச்சகம்

விமானப்படை தளபதி பங்களாதேஷ் பயணம்

Posted On: 22 FEB 2021 4:44PM by PIB Chennai

விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதாரியா, நல்லெண்ண பயணமாக இன்று பங்களாதேஷ் சென்றார்.

பங்களாதேஷ் விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல்  மாசிஹுஸ்மான் செர்னியாபத் விடுத்த அழைப்பின் பேரில், அந்நாட்டுக்கு ஆர்கேஎஸ் பதாரியா சென்றுள்ளார்.

பெங்களூர் எலகங்கா விமானப்படை தளத்தில், சமீபத்தில் நடந்த  ஏரோ இந்தியா 2021 விமான கண்காட்சியில் நடந்த விமானப்படை தளபதிகள் மாநாட்டில் பங்களாதேஷ் விமானப்படை தளபதி மாசிஹுஸ்மான் செர்னியாபத் தனது அதிகாரிகள் குழுவினருடன் கலந்து கொண்டார். அப்போது இந்த அழைப்பு விடுக்கப்பட்டது

பங்களாதேஷில் 4 நாள் பயணம் மேற்கொள்ளும், விமானப்படை தளபதி பதாரியா மற்றும் குழுவினர், பங்களாதேஷ் விமானப்படை தளங்கள் பலவற்றை பார்வையிடவுள்ளனர்.

இருதரப்பு விமானப்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இவர்கள் ஆலோசிக்கின்றனர்.

பங்களாதேஷ் உருவாவதற்கு காரணமான 1971ம் ஆண்டு போரை இரு நாடுகளும் கொண்டாடும் வேளையில், இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இது இருநாட்டு விமானப்படைகளின் உறவையும், நட்பையும் வளர்க்கும்.(Release ID: 1700009) Visitor Counter : 12


Read this release in: English , Urdu , Hindi , Malayalam