நிதி அமைச்சகம்

புனேவில் வருமான வரித்துறை சோதனை

Posted On: 22 FEB 2021 4:01PM by PIB Chennai

மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள சங்கம்னரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் குழுமம் ஒன்றின் தொடர்புடைய மாநிலம் முழுவதுமுள்ள 34 இடங்களில் 2021 பிப்ரவரி 17-ம் தேதி அன்று வருமான வரித்துறை சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

புகையிலை மற்றும் தொடர்புடைய பொருட்கள், மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகளில் இக்குழுமம் ஈடுபட்டுள்ளது.

சோதனை நடவடிக்கையின் போது, புகையிலை வர்த்தகத்தில் ரூபாய்

243 கோடி கணக்கில் வராத பரிவர்த்தனைகளில் ஈடுபட்டது கணினிகளில் உள்ள எக்ஸெல் தாள்கள் மற்றும் கைப்பட எழுதிய விவரங்கள் மூலம் தெரியவந்தது.

மேலும், புகையிலை பொருட்களின் முகவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது, ரூபாய் 40 கோடி மதிப்புள்ள கணக்கில் வராத விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

ரியல் எஸ்டேட் தொடர்பான பரிவர்த்தனைகளில் பதிவு மதிப்புக்கு மேல் இக்குழுமம் பணத்தை பெற்றுக் கொள்வதும், செலுத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக ரூபாய் 18 கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. மேலும் வருமான வரித்துறை சட்டத்தின் 50 சி பிரிவின் கீழ் ரூபாய் 23 கோடி மதிப்பிலான சட்ட மீறல்களில் ஈடுபட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

ரூபாய் 9 கோடி மதிப்பிலான கணக்கில் வராத ரியல் எஸ்டேட் பரிவர்த்தனையில் ஈடுபட்டது சோதனை நடவடிக்கையின் போது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

ரூபாய் ஒரு கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூபாய் 335 கோடி மதிப்பிலான கணக்கில் வராத வருமானம் இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.

 தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


(Release ID: 1700004)