ரெயில்வே அமைச்சகம்

மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் பலவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தார் மத்திய அமைச்சர் திரு.பியூஷ் கோயல்

Posted On: 21 FEB 2021 4:47PM by PIB Chennai

மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் பலவற்றை ரயில்வே அமைச்சர் திரு.பியூஷ் கோயல் இன்று காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமிகு. தேபஸ்ரீ சவுத்திரி உட்பட பலர் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

நியூ ஜல்பைகுரியிலிருந்து நியூ கூச்பெகார் வரை அமைக்கப்பட்ட 126 கி.மீ தூர மின்மயமாக்கப்பட்ட ரயில்  வழித்தடம் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

 இப்பகுதி வடக்கிழக்கு மாநிலங்களுக்கான ரயில் போக்குவரத்தில் முக்கியமான பகுதி. இது ரூ.287 கோடி செலவில் அமைக்கப்பட்டது. இதன் மூலம் டீசல் செலவு குறையும்.

வங்க தேச எல்லை பகுதி அருகே அமைந்துள்ள ஹால்டிபாரி ரயில் நிலையமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்தியாவின் ஹால்டிபாரி மற்றும் வங்கதேசத்தின் சிலாஹாதி ரயில் இணைப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி, வங்கதேச பிரதமர் திருமதி. ஹேக் ஹசினா ஆகியோர் கடந்தாண்டு டிசம்பர் 17 ஆம் தேதி நடந்த இருதரப்பு உச்சிமாநாட்டில் தொடங்கி வைத்தனர்.

 

மேற்கு வங்கத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில், நவீன வசதிகளுடன் கிராஸிங் ரயில் நிலையமாக மாற்றப்பட்ட கங்காராம்பூர் ரயில் நிலையமும் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

அலிபுர்துவார் ரயில் நிலையத்தில் ரூ.8.11 கோடி செலவில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. இங்கு புதிய லிப்ட்களும் திறந்து வைக்கப்பட்டன.

மதரிஹாத் ரயில் நிலையத்தில் ரூ.1.13 கோடி செலவில் அமைக்கப்பட்ட நடை மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. நியூ கூச்பெஹார் ரயில் நிலையத்தில் பிரம்மாண்ட தேசிய கொடிக் கம்பமும் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்சியில் அமைச்சர் திரு. பியூஷ் கோயல் பேசியதாவது:

நாட்டுக்கு மிகச் சிறப்பான சேவையை ரயில்வே செய்து வருகிறது. மேற்கு வங்கத்தில் இன்னும் 3 ஆண்டுகளில், அனைத்து ரயில் வழித்தடங்களும் மின்மயமாகும். இங்கு தற்போது நடைபெறும் ரயில்வே திட்ட பணிகள் விரைவில் முடிக்கப்படும். வடக்கு வங்காளம் மிகவும் அழகான பகுதி. இப்பகுதி அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்.

இப்பகுதியின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக ரயில்வே அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.

இவ்வாறு திரு.பியூஷ் கோயல் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699778



(Release ID: 1699800) Visitor Counter : 153