குடியரசுத் தலைவர் செயலகம்

ஸ்ரீ குரு ரவிதாஸ் விஸ்வ மகாபீட ராஷ்ட்ரிய ஆதிவேஷன்-2021 நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார்

Posted On: 21 FEB 2021 2:13PM by PIB Chennai

சாது ரவிதாஸ் போன்ற தலைசிறந்த ஞானிகள் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் உரியவர்கள் என்று குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

 புது தில்லியில் இன்று (பிப்ரவரி 21, 2021) நடைபெற்ற ஸ்ரீ குரு ரவிதாஸ் விஸ்வ மகாபீட ராஷ்ட்ரிய ஆதிவேஷன்-2021 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

குரு ரவிதாஸ் ஒரு குறிப்பிட்ட சமுதாயம், இனம் மற்றும் பகுதியில் பிறந்திருந்தாலும் அவரைப் போன்ற ஞானிகள் இதுபோன்ற எல்லைகளைக் கடந்து உயர்ந்து நிற்கிறார்கள் என்றும், இவர்கள் எந்த ஒரு ஜாதி, இனம், அல்லது பகுதிக்கும் சொந்தமல்ல என்றும் குடியரசுத் தலைவர் கூறினார்.

 

 இவர்களின் வழியைப் பின்பற்றி பொதுமக்களும் தங்களது எண்ணங்களையும், கண்ணோட்டத்தையும்  மாற்றிக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

குரு ரவிதாஸின் தத்துவங்களும் சமூக நீதிசமத்துவம்சகோதரத்துவம் போன்ற மாண்புகள்  நமது அரசியலமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருப்பதாகவும், குரு ரவிதாஸின்  மாண்புகளை அடிப்படையாகக் கொண்டே அரசியலமைப்பு கொள்கைகளை டாக்டர் பி ஆர் அம்பேத்கார் வடிவமைத்திருப்பதாகவும் திரு. ராம் நாத் கோவிந்த் குறிப்பிட்டார்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அனைத்துப் பிரிவுகளை சேர்ந்த மக்கள் பங்கேற்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இது போன்ற முயற்சிகள் நாட்டில் சமூக சமத்துவத்தையும், ஒற்றுமையையும் வலுப்படுத்த உதவிகரமாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699746(Release ID: 1699759) Visitor Counter : 45