நிதி அமைச்சகம்

ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை

Posted On: 18 FEB 2021 6:44PM by PIB Chennai

ஏலூருவை சேர்ந்த குழுமம் ஒன்றின் தொடர்புடைய ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் உள்ள 21 இடங்களில் 2021 ஜனவரி 28 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

திரைப்படங்களுக்கு கடன் வழங்குதல், மீன் வளர்ப்பு, ரியல் எஸ்டேட், திரைப்பட விநியோகம் மற்றும் வட்டித் தொழில் ஆகியவற்றில் இக்குழுமத்தின் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

ரூ 17,68 கோடி மதிப்பிலான மொத்த சொத்துகள் இது வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏலூரு மற்றும் ராஜமகேந்திரவரம் ஆகிய இடங்களில் அதிகளவில் பணமும், தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

ரூ 161 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத பணப் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

பெங்களூரு மற்றும் மங்களூரில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒன்பது முக்கிய அறக்கட்டளைகள் தொடர்பான கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள 56 இடங்களில் 2021 பிப்ரவரி 17 அன்று வருமான வரித்துறை சோதனை நடத்தியது. மருத்துவ கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை இந்த அறக்கட்டளைகள் நடத்துகின்றன.

மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளின் மாணவர் சேர்க்கையில் நிதி முறைகேடுகள் நடைபெற்றது தேடுதல் நடவடிக்கையின் போது கண்டறியப்பட்டது.

இது வரை சேகரிக்கப்பட்டுள்ள ஆதாரங்களின் படி முறைகேடான கட்டணமாக ரூ 402.78 கோடி வசூலித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ 15.09 கோடி பணமாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, ரூ 30 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், 50 காரட் வைரமும், 40 கிலோ வெள்ளியும் அறங்காவலர்களின் இல்லங்களில் கண்டறியப்பட்டுள்ளது.

கானாவில் ரூ 2.39 கோடி மதிப்பிலான சொத்தும், பினாமி பெயர்களில் 35 சொகுசு கார்களும் கண்டறியப்பட்டுள்ளன.

-----



(Release ID: 1699237) Visitor Counter : 130


Read this release in: Hindi , English , Urdu , Telugu