குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்

“தற்சார்பு இந்தியா” மற்றும் “குப்பையிலிருந்து வளம்” திட்டங்களுக்கு மிகப்பெரிய ஊக்கம்; அசாமில் அகர்பத்தி தயாரிப்பு மையத்தை திரு. கட்கரி திறந்து வைத்தார்

Posted On: 18 FEB 2021 5:43PM by PIB Chennai

இந்திய ஊதுவத்தி தொழிலை வலுப்படுத்த காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் எடுத்து வரும் தொடர் முயற்சிகள் பயனளித்து வருகின்றன. இதில் அசாம் முன்னிலை வகிக்கிறது.

அசாமின் பஜாலி மாவட்டத்தில்கேஷாரி பயோ புரோடக்ட்ஸ் எல் எல் பிஎன்னும் முக்கிய மூங்கில் அகர்பத்தி குச்சிகள் தயாரிப்பு நிறுவனத்தை வியாழனன்று மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சர் திரு. நிதின் கட்கரி திறந்து வைத்தார்.

அசாம் முதல்வர் திரு. சர்பானந்த சோனோவால், காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு. வினய் குமார் சக்ஸேனா ஆகியோர் இதில் பங்கேற்றனர்..

தற்சார்பு இந்தியாமற்றும்குப்பையிலிருந்து வளம்திட்டங்களுக்கு மிகப்பெரும் ஊக்கம் அளிக்கும் வகையில் இம்மையம் அமைந்துள்ளது.

அதிகளவிலான மூங்கில் கழிவுகளை உயிரி எரிபொருள் மற்றும் இதர பொருட்களை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் பயன்படுத்தும்.

ரூ. 10 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள இந்த அகர்பத்தி உற்பத்தி மையம், நேரடியாக 350 பேருக்கும், மறைமுகமாக 300 பேருக்கும் வேலைவாய்ப்பை வழங்கும்.

இறக்குமதிகளை குறைக்க திரு. கட்கரி மற்றும் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு வினய் குமார் சக்ஸேனா பெருமுயற்சிகளை எடுத்தனர். இதன் விளைவாக மூடப்பட்ட நூற்றுக்கணக்கான அகர்பத்தி நிறுவனங்கள் நாடு முழுவதும் கடந்த 1.5 வருடங்களில் புத்துயிர் பெற்றன. இதன் மூலம் சுமார் 3 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

இந்தியாவில் தற்போது ஒரு நாளைக்கு 1490 டன்கள் அகர்பத்தி குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், வெறும் 760 டன்கள் மட்டுமே உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699098

 

**(Release ID: 1699236) Visitor Counter : 185