பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

வாழ்க்கை அறிவியல் நிறுவனத்தின் 32-வது நிறுவன தின விழாவில் திரு.தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்

Posted On: 18 FEB 2021 3:02PM by PIB Chennai

புவனேஸ்வரில் உள்ள வாழ்க்கை அறிவியல் நிறுவனத்தின் 32-வது நிறுவன தின விழாவில் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனுடன் இணைந்து சிறப்புரையாற்றினார்.

வாழ்க்கை அறிவியல் நிறுவனத்தின் பெருமைமிகு பயணத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்த திரு. பிரதான், அங்குள்ளோரின் அர்ப்பணிப்பும், முயற்சிகளும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதோடு, சமுதாயத்துக்கும் நன்மை பயக்கும் என்று கூறினார்.

ஒடிசா மக்களின் வாழ்விலும், வாழ்வாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த வாழ்க்கை அறிவியல் நிறுவனம் செய்து வரும் பணிகள் குறித்து திரு. பிரதான் திருப்தி தெரிவித்தார்.

கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரிலும் முக்கிய பங்காற்றி வரும், வாழ்க்கை அறிவியல் நிறுவனத்தை அவர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699022

 

***


(Release ID: 1699221) Visitor Counter : 150