தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய அகில இந்திய கணக்கெடுப்புக்கான செயலி, அறிவுறுத்தல் கையேடு மற்றும் கேள்விதாள் வெளியீடு

Posted On: 18 FEB 2021 2:48PM by PIB Chennai

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய அகில இந்திய கணக்கெடுப்புக்கான செயலி, பயிற்சி திட்டம், அறிவுறுத்தல் கையேடு மற்றும்  கேள்விதாள் ஆகியவற்றை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணையமைச்சர் திரு. சந்தோஷ் கங்வர் இன்று  வெளியிட்டார்

புலம் பெயர் தொழிலாளர்கள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், தொழில் நிபுணர்கள் உருவாக்கிய வேலை வாய்ப்பு, போக்குவரத்து துறையில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்பு, நிறுவனங்களின் வேலைவாய்ப்பு பற்றிய காலாண்டு கணக்கெடுப்பு ஆகியவற்றை நாடு முழுவதும் தொழிலாளர் அலுவலகம் நடத்துகிறது.

இதற்கான செயலி,அறிவுறுத்தல் கையேடு மற்றும் கேள்விதாள், கணக்கெடுப்புக்கான பயிற்சி திட்டம்  ஆகியவற்றை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர்  திரு. சந்தோஷ் கங்வர்  பேசியதாவது:

தொழிலாளர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் மிக முக்கியமானது. கொவிட்-19 தொற்று சமயத்தில் கொள்கை உருவாக்கத்தின் போது, இந்த தகவல்கள் முக்கியமானதாக இருந்தன

தொழிலாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்து அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்படும் இந்த கணக்கெடுப்பு, தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை அளிப்பதில்  தேசிய அளவில் முக்கிய பங்காற்றும்

இந்த கணக்கெடுப்பை தொடங்க தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் திரு. அபூர்வா சந்திரா, தொழிலாளர் அலுவலகத்தின் தலைமை இயக்குனர் திரு. டிபிஎஸ் நெகி ஆகியோர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது.

இவ்வாறு மத்திய அமைச்சர்  திரு. சந்தோஷ் கங்வர்  தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1699018

-----


(Release ID: 1699218)