சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

இந்திய சைகை மொழி அகராதியின் 3 ஆம் பதிப்பு: மத்திய அமைச்சர் திரு. தவார்சந்த் கெலாட் வெளியிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 17 FEB 2021 5:28PM by PIB Chennai

இந்திய சைகை மொழி அகராதியின் 3 ஆம் பதிப்பை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. தவார்சந்த் கெலாட் காணொலி மூலம் இன்று வெளியிட்டார்.

இதில் ஏற்கனவே உள்ள 6,000 விதிமுறைகளுடன், 10,000 விதிமுறைகள் உள்ளன

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் திரு. கிரிஷன் பால் குர்ஜார், இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த அகராதியை, இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (Indian Sign Language Research and Training Centre (ISLRTC) கொண்டு வந்துள்ளது.   இது சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரம் அளித்தல் துறையின் தன்னாட்சி அமைப்பு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படும் பிராந்திய சைகைகளும் இந்த அகராதியில் உள்ளன.

இந்நிகழ்ச்சியில், பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு. தவார்சந்த் கெலாட், ‘‘நாட்டின் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பணியாற்ற மத்திய அரசு முழு உறுதியுடன் உள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொண்டு வந்தது உள்பட  பல புதிய முயற்சிகளும், திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன’’ என்றார்.

மத்திய இணையமைச்சர் திரு. கிரிஷன் பால் குர்ஜார் பேசுகையில், ‘‘காது கேளாதோர் நலனுக்காக, இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் சிறப்பான பணியை செய்து வருகிறது. அவர்களுக்கு கல்வி கற்பிக்க, பல பாடத்திட்டங்களை இது செயல்படுத்துகிறது.

10,000 விதிமுறைகள் அடங்கிய இந்த அகராதி, தனது நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றும்’’ என்றார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698739

 

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1698853) வருகையாளர் எண்ணிக்கை : 234
இந்த வெளியீட்டை படிக்க: हिन्दी , Telugu , English , Urdu , Marathi , Punjabi