புவி அறிவியல் அமைச்சகம்

கடல் பொருளாதார வரைவுக் கொள்கை குறித்து ஆலோசனை கேட்கிறது புவி அறிவியியல் அமைச்சகம்

Posted On: 17 FEB 2021 11:37AM by PIB Chennai

கடல் பொருளாதார வரைவுக் கொள்கை  வெளியிட்டுள்ள  மத்திய புவி அறிவியியல் அமைச்சகம், பல தரப்பினரின் ஆலோசனையை கேட்டுள்ளது.

நாட்டில் உள்ள கடல் வளத்தை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தி, பொருளாதாரத்தை அதிகரிப்பது  பற்றிய வரைவுக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இதில் கடல் வளத்தை பயன்படுத்தி கொள்வது தொடர்பான தொலை நோக்கு மற்றும் உத்திகள் இடம் பெற்றுள்ளன

இதுகுறித்து பொது மக்கள் உள்பட பல தரப்பினரின் ஆலோசனையை பெறுவதற்காக, இந்த வரைவுக் கொள்கை, மத்திய புவி அறிவியல் துறை அமைச்சகத்தின் இணையதளம், சமூக இணையளம் ஆகியவற்றில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வரைவுக் கொள்கையை  அனைத்து தரப்பினரும் படித்து பார்த்து, தங்கள் ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை 2021 பிப்ரவரி 27 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திகடலோர பகுதி மக்களின் மேம்பாடு, கடல்சார் பல்லுயிர் பெருக்கம், கடல் பகுதிகளின் தேசிய பாதுகாப்பு மற்றும் கடல் வளங்களை  அதிகரிப்பதுஇந்த கடல் பொருளாதார கொள்கையின் நோக்கம்

இந்த கடல் பொருளாதார கொள்கையின் வரைவு ஆவணம் மத்திய புவி அறிவியல் துறையின் இணையதளமான

https://moes.gov.in/writereaddata/files/BlueEconomyPolicy.pdf -ல் உள்ளது.

அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை  blueeconomy-policy[at]gov[dot]in -என்ற -மெயில் முகவரியில் 2021 பிப்ரவரி 27 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1698608

------


(Release ID: 1698738) Visitor Counter : 297