வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

‘டெக்னோகிரஹிஸ்’-க்கான ஆன்லைன் சேர்க்கை முறை அறிமுகம்

Posted On: 16 FEB 2021 4:21PM by PIB Chennai

டெக்னோகிரஹிஸ்’-க்கான ஆன்லைன் சேர்க்கை முறையை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சக செயலாளர் திரு துர்கா ஷங்கர் மிஸ்ரா காணொலி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.

ஐஐடி, என்ஐடி, பொறியியல், திட்டமிடல் மற்றும் கட்டிடக்கலை கல்லூரிகள் ஆகியவற்றின் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் டெக்னோகிரஹி என்று அழைக்கப்படுகிறார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய திரு மிஷ்ரா, கற்றல், ஆலோசனை, சிந்தனைகளின் உருவாக்கம், தீர்வுகள், ஆய்வு, புதுமைகள் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு ஆகியவற்றுக்காக ஆறு எல்எச்பி இடங்களில் உள்ள நேரடி ஆய்வகங்களைக் காண விரும்புவோர் தங்களை இதில் பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார்.

இதன் மூலம் பயன்பாட்டில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்த நேரடி அனுபவம் அவர்களுக்குக் கிடைப்பதோடு, ‘மேக் இன் இந்தியாஅணுகலோடு கட்டுமானத் துறையில் இவற்றை அவர்கள் பயன்படுத்தலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

12 மாதங்களில் எல்எச்பி திட்டங்கள் முடிவதற்குள், அவை செயல்படுத்தப்படும் இடங்களில் இருந்து நேரடித் தகவல்கள் டெக்னோகிரஹிகளுக்கு கிடைக்கும். எல்எச்பி விளக்க திட்ட செய்தி மடலையும் இந்நிகழ்ச்சியின் போது திரு மிஷ்ரா வெளியிட்டார்.

திட்டம் குறித்த தகவல்களை கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பங்குதாரர்கள், மற்றும் பொதுமக்களுக்குத் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு மாதமும் 12 செய்தி மடல்கள் வெளியிடப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் இத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்த தகவல்களைத் தெரிவிப்பதன் மூலம், திட்டம் செயல்படுத்தப்படும் ஆறு மாநிலங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியையும் செய்திமடல்கள் ஊக்குவிக்கும்.

*****



(Release ID: 1698486) Visitor Counter : 236