சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

சுங்கச்சாவடிகளின் அனைத்து வழிகளும், நாளை நள்ளிரவு முதல், பாஸ்டேக் வழிகளாக அறிவிப்பு

Posted On: 14 FEB 2021 5:01PM by PIB Chennai

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளின் அனைத்து வழிகளையும் , பிப்ரவரி 15ம் தேதி நள்ளிரவு/பிப்ரவரி 16ம் தேதி முதல் பாஸ்டேக்  வழிகளாக அறிவிக்க  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முடிவு செய்துள்ளதுஆகையால், தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிமுறைகள் 2008  படி, பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் அல்லது செல்லாத/செயல்பாட்டில் இல்லாத  பாஸ்டேக் பொருத்தப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிகளின் பாஸ்டேக் பாதைக்குள் நுழையும் போது, இருமடங்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும்.

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், டிஜிட்டல் மூலமான கட்டணத்தை மேலும் ஊக்குவிக்கவும், காத்திருக்கும் நேரத்தை குறைக்கவும், எரிபொருள் வீணாவதை தவிர்க்கவும், சுங்கச் சாவடிகளில் தடையற்ற போக்குவரத்தை வழங்குவதற்காக இந்த பாஸ்டேக் முறை கட்டாயமாக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது. நான்கு சக்கர பயணிகள் மற்றும் சரக்கு (எம் மற்றும் என் பிரிவு) வாகனங்களில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக் ஒட்டுவதை  மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் கட்டாயமாக்கியது

எம்பிரிவு வாகனம் என்றால் பயணிகளை ஏற்றிச் செல்லும் 4 சக்கர வாகனம். ‘என்பிரிவு வாகனம் என்றால் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனம், இதில் ஆட்களையும் கூடுதலாக ஏற்றிச் செல்லலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1697928

----



(Release ID: 1697958) Visitor Counter : 313